Wednesday, July 23, 2008

கனகனகனகனகனகனகனகனகனவுவுவுவுவுவுவுவுவு!

21G காந்தி மண்டபம் தாண்டி வேகம் எடுத்திருந்தது. ராஜ் பவனில் சிக்னல் இல்லாத, சிக்கல் இல்லாத ஒற்றை வழி ஆனதில் இனி அடுத்தது ஹால்டா தான். 'கவனம். இங்கு மான்கள் சாலையைக் கடக்கும் இடம்'. போர்டின் கீழே நேராக இருந்த ஒரு மென் ப்ரேக்கரின் அருகே அருள் காத்திருந்து, கொஞ்சம் மெதுவாகையில் தொற்றினான்.

பார்வையை விசிறி அடித்தான். ஓர் இடது சீட்டின் இடத்தில் சஞ்சு அமர்ந்திருந்தாள். கூட்டத்தை நெருக்கிக் கொண்டு, நகர்த்திக் கொண்டு... 'யோவ்! ஏன்யா கால மிதிக்கற', 'சாரி சார்.'.. உள்ளே வந்து விட்டான்.

அருகில் நின்றான். சற்று தணிந்த குரலில்,

"சஞ்சு..! ப்ளீஸ்! ஏன் என்னை ஏத்துக்க மாட்டேங்கற..? என்கிட்ட என்ன குறைச்சல்? ஏன் என்னை எலிமினேட் பண்ற..? ஆறு மாசமா உன் பின்னாடியே சுத்தறேனே...?"

அவள் மெளனி.

"சஞ்சு..! ஜஸ்ட் ரீஸன் மட்டும் சொல்லு.! என்ன பண்ணணும் நான்? என்ன கேரக்டர் சேஞ்ச் பண்ணிக்கணும்..?"

முருகன் மண்டபத்தில் இறங்கிக் கொண்டாள். பின்னால் இவனும்!

"லுக் அருள்! இப்படி பின்னாலேயே வர்றதுனால எந்தப் பொண்ணும் உங்கள லைக் பண்ண ஆரம்பிச்சுட மாட்டா! எனக்கு உங்களைப் பிடிக்கல. ஏன்னா பழைய காரணம் இன்னும் போகலையே!"

"அது போயிடுச்சு..!"

"ஷ்..! மெதுவாகவே கத்துங்க..! இதோட விட்டுருங்க. ப்ளீஸ். இந்த தெருவில என் பேரைக் கெடுத்திடாதீங்க...!"

"அப்ப என் மேல உனக்கு அன்பு வர்றதுக்கு வாய்ப்பே இல்லையா..?"

"ஒண்ணு பண்ணுங்க..! எப்ப உங்க கனவுல ஸ்வரூபா போய் நான் வந்து உங்களைப் பிடிச்சிருக்குன்னு சொல்றேனே, அப்ப வந்து சொல்லுங்க...! கன்ஸிடர் பண்றேன்..!"

"இப்ப எல்லாம் நீ மட்டும் தான் வர்ற..! ஸ்வரூபா எல்லாம் இல்லை. நான் என் பழைய கதையைச் சொன்னது தப்பா போச்சு..! பார், நீ அதை குத்திக் காட்டுற..?"

"இல்ல! நான் என் வாழ்க்கைக்கு ஸேஃபா பேஸ்மெண்ட் போட்டுக்கறது தப்பில்ல..! இப்ப நீங்க சொல்லலாம். பட் உங்க சப் கான்ஷியஸ்ல அவங்க நினைப்பு இருக்கலாம். சோ, எப்ப உங்க கனவில் நான் வந்து உங்களைப் பிடிச்சிருக்குன்னு சொல்றேனோ, அப்ப தான் உங்க மனசுல முழுக்க நான் இருக்கேன்னு அர்த்தம்..! அப்படி நான் வந்து சொன்னேன்னா, வந்து சொல்லுங்க. பட், பொய் சொல்ல நினைச்சீங்கன்னா, அது என்கிட்ட நடக்காது. உங்க கண்ணே காட்டிக் கொடுத்திடும்..! பை..!"

படபடத்துச் சொல்லி விட்டு அகன்றாள். அருள் தொங்கிய முகத்தோடு வீட்டுக்குத் திரும்பினான்.

பேருக்குச் சாப்பிட்டு விட்டு ('பருப்பு தால் இன்னும் கொஞ்சம் போட்டுக்கயேண்டா?' ' பசிக்கலம்மா..'), போய் படுத்துக் கொண்டான். கவலையில், களைப்பில் தூங்கிப் போனான்.

கனவில் சஞ்சு வந்தாள். "ஐ லவ் யூ அருள்..!" என்றாள். கனவு கலைந்து விழித்தான் அருள்.

(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)

4 comments:

வெண்பூ said...

சாரி வசந்த், புரியலயே :(

ஏழெட்டு தடவை ஒரே விசயம் போட்டிருக்குறது குழப்பமா இருக்கு..

1. தினமும் அவன் இதுதான் செய்கிறான். ஒருநாள் அவனுக்கு கனவு வந்தது
2. அறிவியல் கதையா இருக்குறதால, இதெல்லாம் பேரலல் யுனிவர்ஸ், அதுல ஒண்ணுல அவனுக்கு கனவு வந்தது
3. நாம் எதை நினைத்துக்கொண்டு படுக்கிறோமோ அதுதான் கனவில் வரும் அப்படின்னு சொல்றீங்களா?

எது சரி?

இரா. வசந்த குமார். said...

அன்பு வெண்பூ...

ஆஹா.. இந்த மொக்ஸ் கதைக்குப் பின்னாடி இவ்ளோ அர்த்தம் இருக்கா..? ஆச்சர்யம்.

அவ்ளோலாம் திங்க் பண்ணி இதை எழுதலீங்க.

ஒரு க்ளூ குடுத்திருக்கேனே, தலைப்புல...! கவனிச்சீங்களா..? கனவுக்குள் கனவுக்குள் கனவுக்குள்... அப்டியே ஒரு 9 தபா போட்டுக்கிட்டீங்கனா, கனவுங்கற வார்த்தை ஃபுல்லா வருதா?

இப்போ தெளிவாகி இருக்குமே!

அருள் தூக்கத்தில் கனவு காண்றான். அந்த கனவில் தூக்கத்தில் கனவு காண்கிறான். அந்த கனவில் தூக்கத்தில் கனவு காண்கிறான்......

இப்படியே 8 தபா கனவுக்குள்ள, கனவுக்குள்ள,... 8-வது தபா வர்ற கனவுல சஞ்சு 'ஐ லவ் யூ' சொல்றா...! அந்த அருள் தான் முழிச்சிக்கிறான். ரியல் வேர்ல்ட் அருள் இல்லை.

அப்புறம் அப்படியே backwardsல ஒவ்வொரு அருளா முழிச்சிக்கிட்டே வந்து, ரியல் வேர்ல்ட் அருள் முழிச்சிக்கணும்...!

ஒண்ணும் இல்லீங்க, ரொம்ப நாளா recursive loop-ல ஒரு கதை எழுதணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஓ.கே.வான்னு சொல்லுங்க...!

சரி... 8 தடவை தானே கனவு காண்றான். அப்புறம் எதுக்கு 9 தபா கனவுன்னு தலைப்புல வருதுன்னு சொல்லுங்க, பார்க்கலாம்..?

(இதுக்கெல்லாம் க்ளூ கிடையாது. நீங்கள் எல்லாம் அறிவாளிகள் என்பது நனக்கு நல்லாத் தெரியும்...!)

வெண்பூ said...

// ரொம்ப நாளா recursive loop-ல ஒரு கதை எழுதணும்னு //

நல்ல வேளை...

கனவு(8);
..

..
void கனவு( int i ) {
if ( i == 0 ) return;
கனவு( i - 1 );
}

அப்படின்னு எழுதாம இருந்தீங்களே...

//இதுக்கெல்லாம் க்ளூ கிடையாது. நீங்கள் எல்லாம் அறிவாளிகள்//

முதல் பின்னூட்டத்துக்காக இப்படி திட்டிடீங்களே வசந்த்.... :)))

//இந்த மொக்ஸ் கதைக்குப் //
அப்பாடா.. ஒத்துகிட்டீங்களே... அதுவே போதும்..:)))

******

நல்ல திங்கிங் வசந்த்..Keep going...

இரா. வசந்த குமார். said...

அன்பு வெண்பூ...

மிக்க நன்றி தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்...!!!