Saturday, September 27, 2008

புத்தகமா... மின்னூலா?



ந்த படத்தைப் பார்த்தால் சட்டென்று உங்களுக்கு என்ன தோன்றுகிறது? எனக்குத் தோன்றியது கடைசியில்.

ன்று காலை 'உன் கதைகளைப் படிக்கையில் சில கதைகள் புரிகின்றன. சில ஒன்றும் புரிவதில்லை. கடைசியில் புரிகின்ற மாதிரி முடிக்க மாட்டாயா..?' என்று அம்மா கேட்டார்கள். அவர்களுக்கு சொன்னது இங்கே ::

ஆபிஸ் இன்ட்ராநெட் மேகஸினில் இரண்டு கதைகள் ஆங்கிலத்தில் பெயர்த்து வெளிவந்தது. சிலர் படித்து விட்டு 'இதில் நீ சொல்லும் மெஸேஜ் என்ன?' என்று கேட்டார்கள். நான் அவர்களுக்குச் சொன்னேன், 'மெஸேஜ் சொல்ல நான் மெஸையா அல்ல! ஜீஸஸ் அல்ல! மெஸேஜ் கொடுக்க தெனாலிராமன் கதைகள், மரியாதைராமன் கதைகள், ஈஸாப் கதைகள் இருக்கின்றன. அவற்றைத் தாண்டி மெஸேஜ் யாரும் சொல்ல முடியாது.'

சிறுகதை என்பது ஒரு நிகழ்ச்சி, ஒரு சம்பவத்தைச் சொல்லுதல்! அவ்வளவே!

நம் வாழ்வில் நிறைய சம்பவங்கள் ஒவ்வொரு தினமும் நடந்து கொண்டே இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் நம்மிடம் வந்து இந்த நிகழ்ச்சியின் மெஸேஜ் என்ன என்றால்.. என்று சொல்லிச் செல்வதில்லை. இதுவரை வாழ்ந்த நம் வாழ்வு, நாம் பெற்ற அனுபவங்கள், நம் மனப் பதிவுகள் துணை கொண்டு அவற்றில் இருந்து ஒரு கருத்தை உணர்கிறோம்.

உதாரணமாக, பைனான்ஸ் கம்பெனிக்காரன் ஏமாற்றி ஓடிப் போதல் என்பது ஒரு நிகழ்ச்சி. அவன் திரும்பி வந்து நம்மிடம் ' இந்த நிகழ்ச்சியில் இருந்து நீ கற்றுக் கொள்ள வேண்டியது என்னவென்றால், தெரியாத பைனான்ஸில் பணத்தைப் போடக் கூடாது என்பதே! வரட்டுமா?' என்ற் சொல்லிச் செல்வதில்லை. நாமே புரிந்து கொள்கிறோம்.

அது போல் சிறுகதை ஒரு நிகழ்ச்சியை சொல்லி முடிந்து விடும். அது வந்து உங்களிடம் எந்த கருத்தையும் சொல்லாது. நாமே நமது நிலைக்கு ஏற்றவாறு புரிந்து கொள்ள முயல்வோம்.

என்றேன்.

அம்மா ஃபோனில், 'ரம்ஜான் லீவுக்கு ஊருக்கு வருவ இல்ல..? தலைக்கு நல்லா எலுமிச்ச தேச்சு குளிப்பாட்டணும். என்னவோ ஆகிப் போச்சு என் புள்ளைக்கு' என்றார் கவலையுடன்!

நேற்று இந்திய இரவில், துபாயில் இருக்கும் நண்பர் வெங்கியுடன் சாட்டும் போது, 'ரொம்ப நாள் ஆகிற்று புத்தகங்கள் படித்து! நீ என்ன படிக்கறே?' என்று கேட்டார். பந்தாவாய் ஒரு லிஸ்ட் எடுத்து விட்டேன்.'அடேயப்பா! இவ்ளோ புக்ஸ் படிக்கறயா..?' என்று கேட்டார். நோக்கம் நிறைவேறிற்று..!

அவருக்கு ஈ புக்ஸ் படிக்க பிடிக்கவில்லையாம். புத்தகங்களை கையால் தொட்டு தான் படிக்க வேண்டுமாம்.

இதைப் பார்த்தவுடன் ரொம்ப நாளாக எழுத வேண்டும் என்று வைத்திருந்த விஷயம் ஞாபகம் வந்தது.

என்ன தான் மின் நூல்கள் வந்தாலும், புத்தகங்களை வாங்கிப் படிப்பதென்பது தனி தான்.

புத்தகம் என்பது மனைவி போல்! மின் நூல் என்பது பொது மகளிர் போல்!

புத்தகத்தை எங்கும் படிக்கலாம்! பெட்ரூமில், கிச்சனில், பாத்ரூமில்! நமக்கே நமக்கான ஒரு சொத்து! கையோடு எங்கும் கொண்டு போகலாம். நெஞ்சோடு மறைத்துக் கொள்ளலாம். புக் மார்க்ஸ் செய்து கொள்ளலாம். நமக்குத் தோன்றுவதாக குறிப்புகள் எழுதி வைத்துக் கொள்ளலாம், நம் கையால்! ஒரு மஞ்சள் கயிறு இருப்பது சிலாக்கியம். நம் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் இருக்கும். முடிந்தால் திருத்தலாம். இல்லாவிடில் அப்படியே படிக்கலாம். பொருள் மாறாது. புத்தகத்தை வாங்கியவுடன் அந்த புது வாசனையை முகர்ந்து பார்த்தல் பலரின் பழக்கம். கையில் இருக்கும் பைசாவுக்கு ஏற்றாற் போல் தடித்த, ஒல்லி, மீடியம் என்று எந்த வகையிலும் வாங்கலாம். அட்டையில் இருக்கும் தலைப்பைப் பார்த்து உள்ளே இருக்கும் மேட்டரை பெரும்பாலும் புரிந்து கொள்ள முடியும். இதை தான் பெரியவர்கள் 'அகத்தில் இருப்பது முகத்தில் தெரியும்' என்றிருக்கிறார்கள். ஆனால் எப்போதும் இது பொருந்தாது. உதாரணம் 'ஸ்கேரி மூவி' என்றே பேர் போட்டிருக்கும். ஆனால் உள்ளே ஒரே காமெடியாக இருக்கும். லக்கைப் ப்றுத்து, பி.ஜி.வுட்ஹவுஸும் கிடைக்கும்; ஜெஃப்ரி ஆர்ச்சரும் கிடைக்கும். நம் வாழ்க்கை முறையை புத்தகத்தில் பார்க்கலாம். சில பக்கங்களில் சாம்பார் கொட்டி இருக்கும். சோப்பு நுரைகள் தென்படலாம். பயன்படுத்தப்பட்ட இடத்தை இது சொல்லும்.

ஈ புக்ஸ் ஒன்று தான்! எல்லோர்க்கும் ஒரே மாதிரி காப்பி! நேராக கை வைக்க முடியாது! ஒரு இடைவெளி எப்போதும் இருக்கும். பயன்படுத்த ஓர் இடை ஆள் (கணிணி, செல்போன்) தேவை!

புத்தகத்தில் ஒரே பிரச்னை! வேறு யாருக்கும் கடன் கொடுக்கவே கூடாது. போனால் திரும்பி வருவது அரிது!

ரிச்மண்ட் தமிழ்ச் சங்கத்தின் ப்ளாக்கில் சுற்றிக் கொண்டிருந்த போது, இந்த இணைய வானொலி பற்றித் தெரிய வந்தது. சிறப்பாக இருக்கிறது. வரிசையாகப் பாடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. பிற இணைய வானொலிகள் போல் விட்டு விட்டு buffering திணறி வருவதில்லை. சீராக வருகின்றது. வாழ்க்கையின் எதிர்பாரா கணங்கள் போல், ஆச்சர்ய பாடல்கள் அடுத்தடுத்து! கார்த்திக் பூவரசன் பாடி முடிந்தவுடன், டக்கென்று 'காற்றினிலே வரும் கீதம்' வர, ஸ்ரீதேவி 'காற்றில் எந்தன் கீதம்' என்று தொடர்கிறார்.

கலசம்!

னக்குத் தோன்றியது :: கால் வரை நீள் தாழ் சடை!

இப்போது இந்திய மதியம் மூன்று மணிக்கு குளிக்கச் சென்ற போது, பாத் ரூமில் படர்ந்திருந்த ஒரு நூலாம்படையின் தோற்றம். கொஞ்சம் ஊன்றி கவனிக்க, ஒரு சாமியார் நடந்து செல்வது போல் தோன்றியது. மேலுடல் கொஞ்சம் முன் வளைந்து, இடது காலை முன்னோக்கி வைத்து, வலது காலை எடுத்து வைக்க toes ஊன்றும் போது எடுத்த ஸ்நாப் போல் இருக்கிறது.

எனக்கு இதில் ஏதாவது செய்தி இருக்கிறதா?

உங்களுக்கு...?

14 comments:

Anonymous said...

//சிறுகதை ஒரு நிகழ்ச்சியை சொல்லி முடிந்து விடும். அது வந்து உங்களிடம் எந்த கருத்தையும் சொல்லாது. நாமே நமது நிலைக்கு ஏற்றவாறு புரிந்து கொள்ள முயல்வோம்.//

உடன்படுகிறேன்.

மின்னூல் பற்றிய எனது கருத்தும் உங்கள் கருத்தேதான்.

இரா. வசந்த குமார். said...

அன்பு வடகரைவேலன்...

மிக்க நன்றிகள் தங்கள் comingக்கும், கருத்துக்கும்!

புத்தக விரும்பிகள் பெரும்பாலோர்க்கும் இந்த கருத்தே தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

RAGUNATHAN said...

மின்னூல் பற்றி கூறியது மிகச் சரி. நான் நிறைய நாவல்களை டவுன்லோட் செய்தேன். ஆனால் கையில் எடுத்து படிப்பது போன்ற உணர்வு பறந்து போய் விட்டது.

சிறுகதை பற்றிய உங்கள் கருத்து மிகச் சரி. :)

இரா. வசந்த குமார். said...

அன்பு இரகுநாதன்...

மிக்க நன்றிகள் தங்கள் comingக்கும், கருத்துக்கும்!

மின்னூல்கள் மென்னூல்கள். ஒரு சிறு பூச்சி கடித்தாலும் காணாமல் போய் விடும். புத்தகங்கள் அப்படியா..? விசிறி அடித்தாலும் தாங்கும்.

படித்து பல காலம் ஆன பின்னும் நமக்கு நினைவில் இருக்கும் சிறுகதைகள் அனைத்தும் இந்த கேட்டகிரியில் - ஏதோ கொஞ்சமாவது நம்மை சிந்திக்க வைத்திருகும் - தான் வரும்.

வெண்பூ said...

ஒரு ரெண்டு நாள் படிக்கலன்னா 5 பதிவா?? நான் படிக்குற வேகத்த விட அதிகமா பதிவு போடுறீங்க :)))

புத்தகம் குறித்த உங்கள் பார்வைதான் எனக்கும். முக்கியமா கடன் குடுக்கக் கூடாது.. :(

இரா. வசந்த குமார். said...

அன்பு வெண்பூ...

மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கு!

நிறைய புத்தகங்கள் கடன் கொடுத்தே காணாம போயிருக்குங்க...! ;-((

thamizhparavai said...

சிறுகதை பற்றிய கருத்து அருமை... இப்பொழுது புரிகிறது 'பிறழ் இல்லாத புலர்தல்'
ஆனாலும் ரம்ஜான் லீவுக்கு எதுக்கும் ஊருக்குப் போயிட்டு வாங்க..ஏதாச்சும் நல்லது நடந்தாலும் நடக்கும்.
//வாழ்க்கையின் எதிர்பாரா கணங்கள் போல், ஆச்சர்ய பாடல்கள் அடுத்தடுத்து!// அதுதாங்க வானொலியின் செல்வாக்கு...
இப்பொழுது கலசம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்... பஃப்பர் ஆகவே இல்லை. (எம்.ஜி.ஆரின் வாழ்க்கை, பாடல்களுடன் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது)
அறிமுகத்திற்கு நன்றி...
//சாமியார் நடந்து செல்வது போல் தோன்றியது. //
முதல்ல ஒண்ணும் தெரியல்ல... ஆனா இப்போ அப்படித்தான் தெரியுது.
சிறுவயது முதற்கொண்டு , இப்பொழுது வரை நான் கவனிப்பது சுவர்களை.
எங்கள் வீடுகள் எல்லாம் வெள்ளையடித்த சுவர்கள் என்பதால் ஒவ்வொரு வருடம் வெள்ளையடிப்பதனால் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்குகள் இருக்கும்.
அவற்றில் தெரியும் உருவங்கள் சொல்லும் செய்திகள்,கதைகள் ஏராளம்.(மகாபலிபுரம் சென்றதில்லை.ஆனால் அவைகளை விட இவைகள் ஏராளம் சொல்லும்.)

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிகள்.

வானொலி பற்றி எழுத நிறைய இருக்கின்றது. பின்பொரு சமயம்.

நீங்கள் சொல்வது உண்மை தான். சுவர்கள் பல கதைகள் சொல்லும். சுவர் ஓவியங்கள் நம் கற்பனையைப் பொறுத்துப் பல வடிவங்கள் பெறும். மேகங்கள் போல்!

'மண்ணடி மகாவிஷ்ணு' என்ற கதையும் இப்படி பிறந்தது தான். எனக்கு ஒரு முறை இராமர் வீட்டின் புழக்கடைச் சுண்ணாம்புப் பதிவில் காட்சியளித்தார். என்ன, கொஞ்சம் கழுத்தை வளைத்து ஒரு மாதிரி கண்களைச் சுருக்கிப் பார்க்க வேண்டும்.

உண்மையில் சின்னஞ்சிறு வயதில், ஒன் பாத்ரூமில், சுவரில் வித விதமாக ஓவியங்கள் வரைய முயல்வதும் இருந்திருக்கிறது. ;-))

Anonymous said...

சிறுகதைக்கு நீ கூறிய கூற்று மிகச் சரியே . புத்தகங்கள் .அதை எந்த நிலையில் இருந்து கொண்டும் அதாவது படுத்து. ,ரங்கநாதர் போல்,நடந்து ,இது போல எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம். நீ சொன்னது நூற்றுக்கு நூறு சரி. புத்தகங்கள் தனது அன்பு மனைவி போல . அடுத்து அந்த படம் ஒரு உயரமான .ஒல்லியான பெண் மினி skirt அணிந்து கொண்டு .ஹை ஹீல்ஸ் உடன் நடந்து செல்வது போல உள்ளது .

இரா. வசந்த குமார். said...

அன்பு அம்மா,

மிக்க நன்றிகள் தங்கள் கருத்துகளுக்கு! புத்தகங்களைப் பற்றி உங்களுக்கா சொல்ல வேண்டும்? எனக்கு கற்றுக் கொடுத்தவரே நீங்கள் தானே...!

thamizhparavai said...

வாலிபன் உங்களுக்குத் தெரிந்தது சாமியார்....
அம்மாவுக்குத் தெரிந்த்து இளம்பெண்....
நல்ல முரண்....

thamizhparavai said...

yaa.. i got 'maNNadi maHaa vishNu'... now im reading...

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

ஆம்..! நீங்கள் சொன்னதன் பின் தான் தெரிகிறது. நல்ல முரண்.

மன்னிக்கவும். இணைப்பு கொடுக்க மறந்து விட்டேன். அது தவறு தான். அடுத்த முறைகளில் சரி செய்து விடுகிறேன்.

இரா. வசந்த குமார். said...

மண்ணடி மகாவிஷ்ணுவை க்ளிக்கினால் தரிசிக்கலாம்.