Saturday, September 23, 2006

தோண்றது...!

தேன்கூடு செப் '06 மாதப் போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட தமிழ்க் குழந்தைகளை வாழ்த்தி வணங்குகிறேன். எனது பதிவுவலைப் பக்கங்களை நிரப்புவதற்கு போட்டி அறிவித்த தேன்கூட்டிற்கு நன்றிகள். கொஞ்சம் வித்தியாசமாக தலைப்பு கொடுத்து, சோம்பிக்கிடந்த நியூரான்களுக்குத் தார்க்குச்சி போட்ட 'கொங்குராசா'வுக்கு நன்றி. 'மெய் வருத்தம் பாராது, கண் துஞ்சாது' சுடச்சுட விமர்சனங்களை அளித்த 'சோம்பேறிப் பையனு'க்கு நன்றி. அலுவலகத்தில் இந்த மாதம் கொஞ்சம் ஓய்வளித்த செயல்முறைத் திட்ட மேலாளருக்கு சிறப்பு நன்றி(?!).

படைப்புகளைப் பற்றி எனக்கு தோன்றுகிறதை இங்குப் பதிவிடுகிறேன்.

1.சார் கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - தேன்கூடு போட்டி
சிமுலேஷன்
கொஞ்சம் கடியாக இருந்தாலும், படிக்க வைத்தது.

2.லிப்ட்
சிறில் அலெக்ஸ்
இலக்கிய வர்ணனைகள் முலாம் பூசிய, நிதர்சன நிஜ நிகழ்வு.

3.போட்டிக்காக - வெண்பா
அபுல் கலாம் ஆசாத்
வெண்(பா ) பொங்கல்.

4.தவிப்பு
நெல்லை சிவா
இறுதியில் கொண்டை ஊசி வளைவு முடிவு.

5.கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? புதிர்
பினாத்தல் சுரேஷ்
இலக்கியர்களை அவதானித்து அவர்கள் மொழியில் பொழிந்த வார்த்தைகளின் வரிசை.

6.ஐந்து வெண்பாக்கள் - போட்டிக்காக
அபுல் கலாம் ஆசாத்
தமிழ் வெண்(பா) பொங்கல்.

7.கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா
சேவியர்
காற்றில் கரைகின்ற லிப்ட் கேட்பவர்களின் குரல்கள்.

8.கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?
demigod
க்ரைம் த்ரில்லர்.

9.கொஞ்சம் தூக்கி விடலாம்!
யதா
பயன்பட பயன்படுத்திக் கொள்ள.

10.லிஃப்டாவது கிடைக்குமே! / தேன்கூடு போட்டி
ஜி.கௌதம்
நியாயம் தேடும் சிறுகதை. முடிவில் மட்டும் போட்டிச் சங்கிலிக்கான கண்ணி.

11.லூர்து - சிறுகதை - போட்டிக்காக
அபுல் கலாம் ஆசாத்
நல்ல மொழி நடையில் வித்தியாசமான கொஞ்சம் பெரிய கதை. வெண்பா எழுதியவரே பெருங்கதை எழுதிவிட்டார்.

12.'கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?'
Krishnaraj.S
பள்ளி நினைவு.

13.கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?
வசந்த்
உங்கள் கருத்து தான் தேவை.

14.லிஃப்ட் குடுக்கலியோ லிஃப்ட்
சனியன்
பரபரப்பான இளமைக்கான அறிவுரை.

15.இன்னா சார்?
வசந்த்
உங்கள் கருத்து தான் தேவை.

16.சின்னதாக ஒரு லிப்ட்
யதா
ஆசிரியர் தினத்திற்கான படைப்பு.

17.லிஃப்ட்
மகேந்திரன்.பெ
கொஞ்சம் கடி தான்.

18.கொஞ்சம் உடன் அழைத்துச் செல்வீர்களா..?
வசந்த்
உங்கள் கருத்து தான் தேவை.

19.அன்புத் தோழி, திவ்யா..!
வசந்த்
உங்கள் கருத்து தான் தேவை.

20,25,30,32,40.கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 1 ,2,3,4,5
ராசுக்குட்டி
கல்லூரி கலாட்டா.

21.கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?
இளா
வெண் சேலையை வண்ணமாக்கிய புகைப்படங்கள் பதிந்த கவிதை.

22.சாந்தியக்கா
பாலபாரதி
கலங்க வைத்தாலும்...

23.இதுவேறுலகம்
நடராஜன் ஸ்ரீனிவாசன்
கண்ணொளி கிடைக்காதவர்களின் உயர் உள்ளம்.

24.நிலா நிலா ஓடி வா!
luckylook
வானத்தில் பறக்க வைக்கிறது.

26.சில்லென்று ஒரு காதல்
நெல்லை சிவா
நெஞ்சை அள்ளிக் கொண்ட காதல்(?) கதை.

27,46,67,76.எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? - 1,2,3,4
யோசிப்பவர்
படைத்தவரின் பெயரைக் காப்பாற்றிய அறிவியல் குழந்தை.

28.மம்மி..மம்மி..
வசந்த்
உங்கள் கருத்து தான் தேவை.

29.லிப்ட்டு ஸ்கிரிப்டு ஆக்ட்டு
kappiguy
வலை மொக்கராசு.

31.முனி அடி (தேன்கூடு போட்டி)
செந்தில் குமார்
கிராம வாழ்முறை.

33.விரல் பிடிப்பாயா..?
வசந்த்
உங்கள் கருத்து தான் தேவை.

34.அண்ணே..லிப்ட் அண்ணே..!
வசந்த்
உங்கள் கருத்து தான் தேவை.

35.முன்னாவும் ,சில்பாவும்.
umakarthick
கல்லூரிக் கதை.

36.சபலம்
saran
மனத்தின் பலவீனம்.

37.கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?
Udhayakumar
பயத்தின் மறைப்பு.

38.konjam lift kidaikkuma??
Rajalukshmi
சின்னச் சின்ன வார்த்தைகளில் லிப்ட்.

39.லாந்தர் விளக்கு.
வசந்த்
உங்கள் கருத்து தான் தேவை.

41.ஆனா ஆவன்னா... / தேன்கூடு போட்டிக்காக
ஜி.கௌதம்
உருக்கமான ஆசிரியர் கவிதை.

42.சோம்பேறி பையன் (தேன்கூடு போட்டி) !
கோவி.கண்ணன்
இல்லாளின் பெருமை.

43.லிப்ட் ப்ளீஸ்!!!
வெட்டிப்பயல்
க்ரைம் தொடர்.

44.கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா
pavanitha
அப்பா-மகன் பாசம்.

45.லிப்ட் கிடைக்குமா? (தேன்கூடு போட்டி)
madhumitha
லிப்ட் ஆபரேட்டர் கதை.

47.காடனேரி விளக்கு (சிறுகதை)
MSV Muthu
உள்ளூர் த்ரில்.

48.கண்டிப்பாடா செல்லம்...
ramkumarn
மற்றுமோர் கல்லூரி காதல் கதை.

49.கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?
மாதங்கி
எதிர்பாராத முடிவில் நிற்கின்ற சிறுகதை.

50.நிலவுக்குப் போகணும். கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?
முரட்டுக்காளை
அறிவியல் கலந்தடித்த மற்றுமொரு விண்ணியல் கதை.

51.சர்தார்ஜி ஜோக் ஒன்று.... கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?
ramkumarn
யப்பா.. கடி தாங்காமல்...

52.லிப்டாக இருக்கிறேனே..!
வசந்த்
உங்கள் கருத்து தான் தேவை.

53.அவன் கண்விடல்
குந்தவை வந்தியத்தேவன்
குறள் குரல்.

54.கடவுள் கேட்ட லிஃப்ட்
சேவியர்
மனிதன் வெட்கித் தலைகுனிய கடவுளின் சொற்கள்.

55.அவள்
நிர்மல்
என்ன சொல்ல...

56.எங்க வீட்டு ராமாயணம்
சிதம்பரகுமாரி
சுட்டிப் பெண் பார்வையில்.

57.பாகிஸ்தானியுடன் ஒரு லிஃப்ட் - என் அனுபவம்!
உமா கதிர்
பயணத்தில் சில கருத்துக்கள்.

58.போட்டி: பதிவுக்கு மேய்க்கி
bsubra786
கிண்டலோ கிண்டல்.

59.கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?
வலைஞன்
நம்பிகை வரிகள்.

60.தேன்கூடு போட்டிக்கு
வலைஞன்
படித்து முடித்த பின் விளைவுகளை சிந்திக்கத் துண்டும் சின்னஞ்சிறுகதை.

61.லிஃப்ட் கொடுத்தவர்கள்
அஹமது சுபைர்
நன்றி மறக்காத அனுபவம்.

62.ஒரு தலைப்புச் செய்தி
நடராஜன் ஸ்ரீனிவாசன்
பரபரப்பான ஓட்டம்.

63.லிப்ட் கிடைக்குமா மீனாட்சிக்கு?
barath
சமுதாயச் சிந்தனை.

64.மீட் த பெஸ்ட் ஃப்ரெண்ட் - தமிழில்
சரவ்.
மற்றுமொரு முறை படிகத் துண்டும் நடை.

65.மொழிபெயர்ப்பு
நடராஜன் ஸ்ரீனிவாசன்
சமூக நினைவில் முடிகின்ற த்ரில்லர் துவக்கக் கதை.

66.தூக்குங்கள் தூக்குங்கள்
Ilackia
(எனக்கு இந்தப் பதிவு தென்படவில்லை.)

68.தூக்கல் வாழ்க்கை
நடராஜன் ஸ்ரீனிவாசன்
தமிழ்த் தேன்.

69.தீயினால் சுட்ட புண்!!!
வெட்டிப்பயல்
இளமைச் சிறுகதை.

70.அவசரமாய் போய்கொண்டிருந்தேன்...
தொட்டராயசுவாமி
திகில் திருப்பம்.

71.மெளனம் கலைந்தே ஓட..
வசந்த்
உங்கள் கருத்து தான் தேவை.

72.கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா- தேன்கூடு போட்டி
anamika
மழைக் கற்பனை.

73.அல்லக்கை - தேன்கூடு போட்டி சிறுகதை
இன்பா
அரசியல்.

74.மனசில் லிப்ட் கிடைக்குமா
சேவியர்
ரொம்ப ஆசை தான்.

75.“அய்யா!, கொஞ்சம் கருணைகாட்டுங்கய்யா!!”, (தேன் கூடு போட்டிச் சிறுகதை)
kalaimarthandam
கருணைக் கிழங்கு.

7 comments:

முரட்டுக்காளை said...

//அலுவலகத்தில் இந்த மாதம் கொஞ்சம் ஓய்வளித்த செயல்முறைத் திட்ட மேலாளருக்கு சிறப்பு நன்றி(?!).

நாம் நினைச்சது சரிதான்னு இன்னிக்கு தெரிஞ்சு போச்சு. ;-)

பஞ்ச் லைன்ல கதை விமர்சனம் எல்லாம் போட்டு தாக்கிட்டிங்க !

newsintamil said...

//படித்து முடித்த பின் விளைவுகளை சிந்திக்கத் துண்டும் சின்னஞ்சிறுகதை.//

இந்தக் கதையின் நோக்கத்தை சரியாக வெளிப்படுத்தியதற்கு நன்றி

ஓகை said...

நல்ல ஆய்வு. உங்கள் உழைப்புக்கு என் நன்றியும் பாராட்டுகளும்.

உங்களுக்கு அடுத்தபடியாக அதிக படைப்புகளை போட்டிக்கு அனுப்பியவன் என்கிற முறையில், இந்தப் போட்டியில் படைப்புகளின் எண்ணிக்கையில் முதலாமிடத்தில் இருப்பவரை இரண்டாம் இடத்தில் இருப்பவன் வாழ்த்துகிறேன்.

ஓகை said...

ஏன் மட்டுறுத்தல் இல்லை?

வசந்த் said...

ஐயா ஓகைக்கு.. நன்றிகள். வந்து பார்த்து, பின்னூட்டம் எல்லாம் கொடுத்திருக்கீங்க. நிறைய படைப்புகள் அனுப்பியிருந்ததற்கு வாழ்த்துக்கள்ங்க. அப்படியே இந்த 'மட்டுறுத்தல்'னா என்னனு கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும். நாம இப்ப தான் இந்தப் பதிவுலகத்துக்கு வந்து புதுசு. கொஞ்சம் சொன்னீங்கன்னா, அதிலயும் பிரிச்சு எடுத்திடலாங்க.

ஓகை said...

வசந்த்,

பிளாகர் உதவியில் comments moderation என்று இருக்கும் பகுதியைப் பாருங்கள். அதைப் படித்து அதன்படி செய்யுங்கள். மட்டுறுத்தல் செய்யாவிட்டால் தமிழ்மனத்தில் உங்கள் வலைப்பூ இடம்பெறாது. அது மட்டுமல்ல.... வேண்டாம், நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.

ஓகை said...

செஞ்சுட்டீக போலருக்கே! நன்று.