அவள்
புருவங்கள்
நெருக்கமாக,
அடர்த்தியாக
இருந்தன.
அவற்றின்
நுனிகள்
அவள்
கண்களில் இருந்து
கூர்மையைக்,
கடன்
வாங்கியிருக்கலாம்!
ஓர் இரவில்
அதி நெருக்கத்தில்
பார்த்தேன்.
பதற்றப்
பரவசத்தில்
வியர்வைத் துகள்கள்
துளிர்த்திருந்தன.
இன்னும் நெருக்கம்.
ஓரங்களில் இருந்து
மெல்ல எழும்பி,
மத்தியில்
உச்சத்திற்கு
உயர்ந்து,
மறு எல்லையில்
சரிகின்றன.
அவற்றுக்கிடையே
மீக் குறைந்த
இடைவெளியே
இருந்தது.
அவளின்
Cleavage
போலவே!
இது
அவள்
புருவங்களைப்
பற்றிய
கவிதையாகவும்
இருக்கலாம்...!
***
ஆண்கள் குளிப்பிடம்.
ஷவர் கைப்பிடி மேல்
ஒரு பொட்டு!
2 comments:
//இது
அவள்
புருவங்களைப்
பற்றிய
கவிதையாகவும்
இருக்கலாம்...!//
இருக்கலாம்...லாம்....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...
இரண்டாவது கவிதை(ஹைக்கூ) தங்களின் 'மண்ணடி மஹாவிஷ்ணு' கதை படிக்கையிலேயே மின்னிச் சென்றது என் மனதில். வரிகளில் சிறைப் பிடித்ததற்கு நன்றி...
அன்பு தமிழ்ப்பறவை...
நினைத்துப் பார்த்தால், இந்தக் கவிதை, பாய்ஸின் 'புருவங்கள் இறங்கி மீசை ஆனது'க்கு ஒத்துப் போகின்றது. ஆண்களுக்கு புருவங்கள் மீசையோடு ஒப்பிடப் படுமெனில், மங்கையர்க்கு என்று சிந்தித்ததில் உதித்த உன்னதக் ஒப்புமைக் கருத்து, இது..!
இந்த ஹைக்கூ, அந்த நாளின் அலுவலக பாத்ரூமில், துருப்பிடித்த ஆணித் தலை சொல்லியது.
Post a Comment