03.Mar.2006
எந்தப் புன்னகையால் மனதைத் திறந்து மெல்ல நுழைந்தாய்?
எந்த ஸ்பரிசத்தால் தொடர்ந்து வருகிறாய் நிழலென?
எந்த கணத்தில் நிறைந்தாய் இதயந்தின் பள்ளங்களில் அமைதியான குளமாய்?
எந்த தனிமையின் நேரங்களில், என் இமைகளைப் பிளந்து கண்களின் பாப்பாவானாய்?
எந்த இரவின் தனிப் பயணங்களில் நகர்ந்து சென்றாய், ஓர் உயிரின் மேல் உடைந்த கண்ணாடித் துண்டுகளை வீசி விட்டு?
எந்த மழைநாளின் சாரல்களாய்த் தூறி விட்டுச் சென்றாய், நிறையாத பெரும் இரவில் நனையாமல் நகர்கின்ற வெண்ணிலவாய்?
எந்த நினைவுகளோடு நான் போராடிக் களைப்பது, தினம் உயிர் தின்னும், வெயில் வீசுகின்ற பகலில் காயும், முன் தினமழையில் முளைத்தாய் காளானாய்?
எந்த வார்த்தைகளை நான் அறைந்து கொள்வது, சிலுவையின் ஆணி நுனிகளில் உறைந்து வழிகின்ற சிவப்புத் துளிகளாய்?
2 comments:
வந்தாச்சா...?! ஓ..கே...
//எந்த வார்த்தைகளை நான் அறைந்து கொள்வது//
கொள்வது அல்லது கொல்வது...?
எந்த வார்த்தையை நான் எடுத்துக் கொள்வது?
அன்பு தமிழ்ப்பறவை...
கொள்வது என்பதே நான் சொல்வது...!!
Post a Comment