Wednesday, November 26, 2008
தீராப் பகை!
20.OCT.2005
இரவில்
பெய்யும் மழை போல,
என் காதல்
கவனிப்பாரற்றுப்
பொழிந்து
கொண்டிருக்கிறது!
சற்று
நனைய
வருவாயா..?
***
12.DEC.2005
நகர்ந்து நடக்கும்
நத்தைக்
கூட்டுக்குள்
நிறைந்து இருக்கும்,
பயணத்தின்
வழியெங்கும்
வழியச் செய்ய
ஒரு காதல்!
உலர்ந்து கிடக்கும்
என்
மெத்தைச்
சூட்டுக்குள்
உறைந்து இருக்கும்,
வாழ்வின்
நிழலெங்கும்
வருகின்ற
ஒரு பாடல்!
***
பிடிக்கவில்லை
உன்னை,
பிடிக்கின்றது
உன் கவிதைகளை,
என்கையில்
நீ
ஏற்படுத்துகிறாய்,
என் வரிகளின்
மேல் எனக்கே
தீராப் பகை!
***
பிடிக்காத
உன் மனதின்
கரையில்
ஊறாதோ
என் மீது காதல்,
கடற்கரையிலேயே
ஊறிடும்
நன்னீர் போல!
***
22.dec.2005
தந்தையின்
திட்டுகளுக்காக,
தாயின்
அறிவுரைகளுக்காக
அல்ல,
நான்
நல்லவனாகிறேன்,
நீ
தினம் எழுதும்
ராமஜெயங்களுக்காக!
***
படம் நன்றி :: http://www.deatonstreet.com/i/portfolios/depth/9_Rain_at_Night.jpg
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நண்பர் வசந்த்துக்கு...
மழைக்கவிதைகள் அருமை... அதிலும் தலைப்புக்கவிதை தீரா நே(வா)சிப்பை ஏற்படுத்தக்கூடியது.
அன்பு தமிழ்ப்பறவை...
மழையும், காதலும் வேறு வேறா என்று எண்ணிப் பார்த்தால் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. காதலில் நிலவின் பங்கு எவ்வளவோ, அதற்குச் சற்றும் குறையாத பங்களிப்பை மழையும் செய்திருக்கும்.
தனியாக, இரவில் தூக்கம் வராத பயணத்தில், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தால், கரிய வானில், சாம்பல் மேகங்களுக்கு உள்ளிருந்து ஏகாந்தமாக கூட வரும் ஒற்றை நிலா ஏற்படுத்தும் எண்ணங்களுக்கு எல்லோர் மனதிலும் மறக்க முடியாத இடம் உண்டு.
ஊரெங்கும் ஊசி போடும் குளிர்க் குச்சிகளைக் கோர்க்கும் மழையின் கரங்களைப் பிடித்துக் கொண்டு சொர்க்கம் செல்லும் மனம், கலை மனம்..!
நிலவும், மழையும் வேறல்ல.... கவிஞனுக்கு...!
Post a Comment