Friday, November 14, 2008

மூன்று வருடங்கள் + 1 நாள் முன்பு எழுதிய கவிதைகள்.

மிகச் சரியாக மூன்று வருடங்கள் மற்றும் ஒரு நாள் ஆகின்றன. இந்த கவிதை வரிகளைப் படிக்கும் போது, ஒரு வீச்சு அப்போதைய கவிதைகளில் இருந்ததை உணர்கிறேன்.

இப்போதும் கதைகளின் பக்கம் மனம் சாய்ந்து கிடந்து, தர்க்கமாக யோசித்து சம்பவங்களைக் கோர்ப்பதில் சலிப்படையும் போது, ஆழ்மனப்பிரவாகமாக எழும் கவிதைகளிடம் சரணடைந்து களிப்புறுகிறேன்.

13.Nov.2005

சிரிப்பான
பொழுதுகளின் போது
படிந்த
உன்னழகின்
இனிப்பான பதிவுகளைத்
தொட்டு அழிக்கிறது,
மறுப்பின் போது
நான் கண்ட
வெறுப்பு முகத்தின்
ஈரக்கை..!

பாராமல்
நீ
நகரும் போதெல்லாம்
பாரமான
ஒரு கல்லாய்
மனதில்
உருக் கொள்கிறது
ஒரு பாரா(றா)ங்கல்..!

ல்லறையில் பூத்திருக்கும்
புளியஞ்செடி
அறிவதில்லை,
கிளைகளில்
பேய்கள் வந்து ஆடும்
என்று..!

கொல்லையிலே நனைந்திருக்கும்
மாஞ்செடி
நினைப்பதில்லை,
கல்லடி
வாங்கித் தர
காய்கள் கனிக்கும்
என்று..!

எல்லையிலே காத்திருக்கும்
பெருவீரனுக்குத்
தெரிவதில்லை
எந்தப் போரில்
இறுதி நாள்
என்று..!

சொல்லையிலே
உனக்குப்
புரிவதில்லை,
பேசிக் கொண்டிருப்பது,
இறந்து போன
ஒரு
பிணத்தோடு
என்று..!

2 comments:

thamizhparavai said...

புளியஞ்செடி, மாஞ்செடி,போர்வீரன் ஓ.கே...
க‌டைசிப் பத்தி புரியவில்லை.

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

அவன் சொன்ன காதலை ஏற்க மறுத்து, அவள் காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அவன் மனதளவில் மரித்துப் போனவன் ஆகின்றான் அல்லவா..? அது தான் அந்தக் கடைசி பத்தி.