Friday, November 14, 2008

குறு வரிகள்.

பெருங் கவிதைகளை விடவும் கடினமான செயல் குறு வார்த்தைகளால் எழுதுவது. சின்னச் சின்ன வரிகளிலேயே, அர்த்தத்தை உணர்த்தி விட முயல்வது எந்தக் கவிஞனின் முயற்சிகளிலும் முக்கியமான ஒன்று. அந்த சவாலே அவனுக்கு சுவாரஸ்யம் ஆகின்றது.

04.Nov.2005.

பெருமழையின்
பொழிதலில் உடைகின்ற,
அணைக்கட்டுகள்
போல் அல்ல,
சிறு தூறலில்
நனைகின்ற
மஞ்சள் சுவர் போல்
நான் இருக்கின்றேன்.
நீ
எப்படி வருகின்றாய்.?

விர்த்து விட்டு
நீ போகையில்,
தவிக்கத் தவிக்கப்
பற்றும்
என் மனத்தை
மரணத்தின் வலி.!

விடியலில்
உடைகின்ற
கனவுகளின் நுரைகளின்
மேல்
மாறுகின்ற
வண்ணப் படலமாய்
நீ...!

தாயற்ற
கைக் குழந்தையுடன்
தகப்பன் போல்
தவிக்கிறேன்
நீயற்ற
நம் காதலுடன்..!

ன்னைத்
தவிர்க்கப் பார்ப்பதிலும்
தள்ளி
வைப்பதிலும்
நீ
சொல்லும்
பொய்களின்
சாயம்
வெளுக்கும் போதெல்லாம்
கூசிப் போவது
நீயில்லை..!

7 comments:

Anonymous said...

குறுவரிகள் அருமை, வசந்த்!

கொரியர் கிடைத்து விட்டது போல!? :P

இரா. வசந்த குமார். said...

அன்பு சுந்தர்...

நன்றிகள்..!

ஆம், courier காலத்தின் திசையில் பறந்து வந்து சொல்கிறது கடந்தாண்டுகளில் என் மனநிலையை...!

thamizhparavai said...

//கனவுகளின் நுரைகளின்//
கனவுநுரைகளின் என்றிருந்தால் இன்னும் நன்றாக இருக்குமோ..?!
//தாயற்ற
கைக் குழந்தையுடன்
தகப்பன் போல்
தவிக்கிறேன்
நீயற்ற
நம் காதலுடன்..!//
நல்ல உவமை...
கடந்த நான்கைந்து பதிவுகளுக்குப் பின் உங்கள் 'டச்' அப்படியே தெரிந்தது அந்தக் கடைசிக் கவிதையில்தான். அதுதான் முகம் பார்க்கும் கண்ணாடி போல் எல்லோரையும் உணரவைத்தது.
//கூசிப் போவது
நீயில்லை..!
//
எக்ஸலண்ட் வசந்த்...

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

மிக்க நன்றிகள். அந்தக் கடைசிக் குறுங்கவிதைக்குப் பின் விரிகின்ற அர்த்தங்கள் எக்கச்சக்கம். அது படிப்பவரை மேலும் சிந்தனைகளுக்குள் ஆழ்த்தி விடுகின்றது. நானும் அதைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும் போது, மனம் பல கற்பனைகளுக்குப் பறக்கிறது.

நன்றிகள்.

அது சரி... ஏதோ "டச்" என்றீர்களே..? அது என்ன..? தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றது. :)

thamizhparavai said...

//அது சரி... ஏதோ "டச்" என்றீர்களே..? அது என்ன..? தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றது. :)
//
கடைசிக்கவிதையை வசந்த்தாக இல்லாமல் படித்துப் பாருங்கள். புரிந்தாலும் புரியலாம்.

இரா. வசந்த குமார். said...

'வசந்த்தாக இல்லாமல்'.... ரொம்ப கஷ்டம் தான்...! :)

thamizhparavai said...

அதுக்கு நான் ஒண்ணும் பண்ணமுடியாது...