இரண்டு நாட்களுக்கு முன் கைக் கடிகாரம் தொலைந்து போனது. ஒன்றும் கவலை தோன்றவேயில்லை. 'சரி, கிடைத்தால் கிடைக்கட்டும். போனால் போகட்டும். யாரிடமும் சொல்லக் கூடாது. பார்ப்போம். கிடைக்குமா, இல்லையா என்று' என்று முடிவெடுத்து, எப்போதும் போல் Cool-ஆக இருந்தேன்.
இன்று கிடைத்து விட்டது. ஒன்றும் சந்தோஷம் தோன்றவில்லை. அப்படியா, கிடைத்து விட்டதா, நன்று என்று கட்டிக் கொண்டேன்.
கொஞ்ச நாட்களாகப் படுத்தி எடுத்த ஒரு Bug, திடீரென ஒரு வெள்ளிக் கிழமை இரவு சரியாகி விட்டது என்று தொலைபேசியில் வந்தது. சந்தோஷமே தோன்றவில்லை. 'அப்படியா' என்று சொல்லி விட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விட்டேன்.
என்ன காரணம்?
மனம் பக்குவமடைந்து கொண்டிருக்கிறதா? இல்லை யோகா, தியானம் சென்று செய்வதால் ஏதாவது விளைவா?
கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது...!
No comments:
Post a Comment