Wednesday, February 13, 2008

பனி மழை பொழிய...

பாதி புதைந்த திசைகாட்டியின் திசையில் மெல்ல நடை போடுகின்றது, கால் தடங்களை அடுத்த நொடியில் மூடிக் கொள்ளும் பனிப்புயலில் என் கால்கள். கண்கள் மட்டும் வெளியே தெரிய இறுக்கிப் பூட்டிய கம்பளித் தோலணிந்து கொன்டு நான் நடக்கின்றேன்.

வெண்மை பூத்திருந்த பனிப்பரப்பில் எல்லைகளுக்கு அப்பாலும் எட்டிப் பார்க்க, விழிகளைப் பிடுங்கித் தூர எறிகையில், கையில் ஒளி சிந்தும் எண்ணெய் விளக்கை ஏந்திக் கொண்டு நீ நிற்பதை வந்து சொல்லி, மூச்சிரைத்தன, கண்கள்.

'ஊஊ....'வென ஊதற்காற்று அடித்துக் கொண்டே இருக்கின்றது. மினுக் மினுக்கென மின்னும் தொலைவின் ஒளித் தூளை நோக்கி நான் நடந்து வந்து கொண்டே இருக்கின்றேன். பனித் துகள்கள் பொழிந்து கொண்டே இருக்கின்றன. தூர மலை முகடுகளின் நுனிகளைக் கவிழ்த்துப் போட்ட பனி மூட்டைகள், உருண்டோடி சமதளத்தை அடைகையில் என் கால் தடத்தில் கொஞ்சம் இளைப்பாறுகின்றன.

கையில் ஊன்றிய தடிக்கும் குளிரெடுத்துப் போனது போல், நடுங்கத் தொடங்கியிருந்தது. பச்சை நிறப் பூக்கள் போல் ஆங்காங்கே பூத்திருக்கும் புற்களும் இப்போது புதைந்திருந்தன.

வெண் துகள்கள் வேகமாய் வீசிய போது, எங்கேயும் சிக்காமல் தப்பி என்னை அடைந்தது, நீ காத்திருக்கும் செய்தியோடு நெருப்புப் பொறி.

இதோ, இன்னும் சில மணிகள் தான் எனும் போது, உனது குடிசையை உள் வாங்கத் தொடங்கியது பனிமழை. எனது இதயத் துடிப்போடு போட்டியிட்டுக் கொண்டு, விளக்கின் ஒளி துடிக்கத் தொடங்கியது.

வேக வேகமாக நடக்கத் தொடங்கினேன். விரல்கள் விறைத்துப் போன பின், நடை பழகும் கால்கள் போல் நடப்பதற்கே நடுங்கினேன். பள்ளத்தாக்கில் பாய்ந்து வரும் வெண்ணீராய் விரைந்து அடைந்தேன்.

குடிசையின் கூரைகளில் கூடு கட்டத் தொடங்கிய வெண் அரக்கனை விரட்டத் தொடங்கினோம். மெல்ல மெல்ல சூட்டை ஏற்படுத்திக் கொண்ட தீப்ப் பொறிகளின் கூட்டம் பெரு நெருப்பானது.

உருகி உருகி ஓடத் தொடங்கியது நம்மை போர்த்தியிருந்த பனி.

முழுதும் கரைந்து ஓடியபின் இறுக்க மூடிய வீட்டிற்குள், நாம் சொல்லிக் கொண்டோம்...





Get Your Own Hindi Songs Player at Music Plugin

No comments: