Wednesday, February 13, 2008

யாரடி நீ மோகினி?



யாருமற்ற சாலையில் யாருக்காகப் பெய்து கொண்டே இருக்கின்றது தெரு விளக்கின் மஞ்சள் ஒளி?

கேட்க காதுகளே இல்லாத இருட்காட்டுக்குள், எதற்காகப் மிகச்சப்தத்துடன் சாய்கிறது இப்பெருமரம்?

பதித்துப் போன பல்லாயிரம் பதிவுகளை தன்னுள் கரைத்துக் கொள்ள எதற்காக பொங்கி வருகின்றது இந்த கடல் அலை?

இரசிக்க மனமே இல்லாத எந்த மனதிற்கு, சோகமாய் இசைத்துக் கொண்டே இருக்கின்றது துளை விழுந்த வன மூங்கில்?

வரவே வராத எந்த தெய்வத்திற்காக நாளெல்லாம் நடக்கின்றது பூஜை?

பார்க்கவே பார்க்காத எக் கண்களுக்காக, வரைந்து கொண்டே இருக்கின்றது இத் தூரிகை?

நடக்கவே நடக்காத எந்தப் பாதங்களுக்காக பாதை அமைத்துக் கொண்டிருக்கின்றது இக் கரங்கள்?

நிரம்பவே நிரம்பாத எந்தக் கிணற்றுக்காக பொழிந்து கொன்டே இருக்கின்றது குளிர் மழை?

காணவே காணாத எந்த உயிருக்காக, உருகி உருகி ஊற்றிக் கொண்டே இருக்கின்றது, என் பேனா....?

அனைவர்க்கும் இனிய காதல் தின நல்வாழ்த்துக்கள்.


Get Your Own Hindi Songs Player at Music Plugin


(யப்பா.. மூச்சு வாங்குது. இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்தத் தலைப்புல எழுதவே கூடாது..)

4 comments:

Anonymous said...

///(யப்பா.. மூச்சு வாங்குது. இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்தத் தலைப்புல எழுதவே கூடாது..)///

ஹாஹாஹா...ரொம்ப feel செய்து எழுதிட்டீங்க போல இருக்கு...அதுதான்...

ஆமா, இது என்ன எல்லாப் பாட்டும் ஒரே சமையத்தில் பாடுது??

:)))

எதுவும் ஸ்பெசல் effect-aa?? :)))

இரா. வசந்த குமார். said...

அப்படியெல்லாம் எதுவும் இல்லீங்க... நீங்க ஏதும் தப்பா, கிப்பா நெனச்சுக்கிடாதீங்க..

எல்லாப் பாட்டும் பக்கம் லோடு ஆனவுடன் பாடுவது போல் tune செய்யப்பட்டிருக்கிறது. க்ளிக் செய்தால் மட்டும் பாட வேண்டுமென்றால், கொஞ்சம் மாற்ற வேண்டும்.

Anonymous said...

thappa elaam nenaikalai vasanth...:)))

nama oorla "kaadhalar dhinam" aachey...adhuthaan rompa paravasam aayiteengalOnu keten...:))

but, elaa paatum nalla iruku...:)

இரா. வசந்த குமார். said...

ஏங்க பாட்டெல்லாம் நான் எழுதின மாதிரி, என்னப் பாராட்டறீங்க.. எல்லாம் இசைஞானியோடது.... இருந்தாலும் ரொம்ப நன்றிங்க...