இப் பதிவின் தொடர்ச்சி இது.
சென்ற முறை பயணம் செய்தது போல் இன்றி, இம்முறை உண்மையாகவே பேருந்து விட்டுப் பேருந்து தாவித் தான் பயணிக்க வேண்டியதாகி இருந்தது.
கழக்குட்டத்தில் இருந்து கிளம்பி, பவானியில் இருக்கும் உறவினர் வீட்டை அடைய மொத்தம் எட்டு பேருந்துகள் தேவைப்பட்டன.
கழக்குட்டம் - கொல்லம், கொல்லம் - எர்ணாகுளம், எர்ணாகுளம் - திருச்சூர், திருச்சூர் - பாலக்காடு, பாலக்காடு - கோவை, கோவை - லட்சுமி நகர் பைபாஸ், பைபாஸ் - அந்தியூர் பிரிவு.
நல்லவேளையாக, கொல்லம் - எர்ணாகுளம் இடையில் ஆலப்புழை வரை செல்லும் பேருந்தில் மாட்டிக் கொள்ளாமல், ஸ்ட்ரெய்ட்டாகவே செல்ல முடிந்தது.
இப்பயணம் முழுதும் இரவிலேயே நடந்து முடிந்ததால், எதுவும் சிறப்பாகச் சொல்ல இல்லை. சென்ற பயணத்திலேயே, பகல் பயணத்தைக் கண்டு விட்டதால், இம்முறை இராப்பயணம்.
விரிவாக எதுவும் இம்முறை எழுத முடியவில்லை. பின்பு விளக்கமாக எழுதுகிறேன்.
இப்பண்டிகைகளின் போது, எடுத்த புகைப்படங்களை மட்டும் இத்துடன் இணைக்கிறேன்.
திரும்ப வரும் பயணம் பவானி - ஈரோடு, ஈரோடு - திருச்சூர், திருச்சூர் - கழக்குட்டம் என்று சுருக்கமாக முடிந்து விட்டது சற்று எளிதாக இருந்தது.
2 comments:
மலைநாட்டு மக்களுக்காகவே நிறைய ரயில்கள் உள்ளனவே அய்யா.அடுத்த முறை ஈரோட்டிலும்,எர்ணாகுளத்த்திலும் விசாரித்துவிட்டு பஸ் ஏறவும்
அன்பு வேலரசி அவர்களுக்கு... தங்கள் அன்புக்கு மிக்க நன்றிகள். ஓர் இரயிலில் இடம் பிடித்து, அவ்விடத்தை அடைந்து, கொஞ்ச நேரம் அங்கிருக்கும் மற்றவர்களோடு பேசி விட்டு, எப்போது பட்டறையைப் போடுவார்கள் என்று குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, பெர்த்தில் கால் நீட்டி படுத்துக் கொண்டு வருவதில் எனக்கு எங்கும் விருப்பமே இருந்ததேயில்லை.
அடித்துப் பிடித்து, டார்வின் தியரியை நிரூபித்து, 4 பேர் அமருமிடத்தில் 6 பேர் அடைத்துக் கொண்டு அமர்ந்து அதிலே வருகின்ற சாமான்யரில் இருந்து, ஃபுல் சூட்டில் தம்மை அடைத்துக் கொண்டு பயணிக்கும் சேல்ஸ் ரெப் வரை எல்லோரையும் கண்டு பேசிக் கொண்டு வருவது தான் உகப்பாய் இருக்கிறது எனக்கு.
கதைகளுக்கும் கவிதைகளுக்கும் பின் கருவை எங்கிருந்து எடுப்பது நான்...?
தற்சமயம் பேருந்து பயணம் அப்படி ஒரு வாய்ப்பைத் தருவதில்லை. எனினும் பல பேருந்துகளில் மாறி மாறி பயணிப்பது பயணங்களில் பெரு விருப்பு உள்ளவனுக்கு மகிழ்வைத் தானே தரும்...!
Post a Comment