Saturday, April 26, 2008

எனவே, நான், வேண்டாம். - 5

"டாக்டர்..! நான் க்ளீனா சொல்லிட்டேன். பெங்களூர்ல இருந்து வரும் போது சந்த்ரூ என்ன எல்லாம் சொன்னானோ அதை எல்லாம் க்ளியரா சொல்லிட்டேன். என்ன ப்ராப்ளம் அவனுக்கு?" ராக்கேஷ் கேட்டான்.

அறை : டாக்டர் கைலாசபதியின் கன்சல்டிங் ரூம்.

யாவர் : ராக்கேஷ், சந்த்ரூவின் பெற்றோர், சில இளைய மருத்துவர்கள், நான் மற்றும் நீங்கள்.

"மிஸ்டர் ராக்கேஷ்! நீங்க சொல்றதை எல்லாம் வெச்சுப் பார்க்கும் போது எனக்கு சில முடிவுகள் எடுக்கத் தோணுது. பட் ஸ்டில் சில கொஸ்டின்ஸ் பாக்கி இருக்கு, உங்க கிட்ட கேக்கறதுக்கு! நீங்க அவர் கூட ஸ்கூல்ல இருந்து காலேஜ் வரைக்கும் படிச்சிருக்கீங்க இல்லையா?"

"எஸ் டாக்டர்!"

"சந்த்ரூக்கு காலேஜில் ஏதாவது காதல் அனுபவம் இருக்கா?"

தயக்கமாக சந்த்ரூவின் பெற்றோரை ஏறிட்டு,"இருந்தது சார்!"

"அதைப் பத்தி நீங்க கொஞ்சம் சொல்லணும்"

"அவனும், ஒரு நார்த் இண்டியன் கேர்ளும் ரொம்ப டீப்பா லவ் பண்ணாங்க. ரீமா. அது தான் பொண்ணு பேர். அவ எஸ்.ஐ.ஈ.டி. நாங்க லயோலா. ரெண்டு பேரும் ரொம்ப ஜோவியலா சுத்துவாங்க. தியேட்டர்ஸ், ரெஸ்டாரண்ட்ஸ், நிறைய தடவை அவுட்டிங் எல்லாம் கூட போயிருகாங்க. அவ்வளவு லவ்வபிள் கப்பிளா இருந்தாங்க. இவன் நல்லா படிக்கிற பையன். சடனா எல்லாம் உடைஞ்சு போச்சு. ஏதோ ப்ரச்னை அவங்களுக்குள்ள. இவன் ஏதோ எல்லை மீறிட்டதா வதந்தி எங்களுக்கு கிடைச்சுது. அதில அந்தப் பொண்ணு கோபமாகி, அவன் கூட லவ்வை ப்ரேக் பண்ணிடிச்சு. அதில இவன் ரொம்ப சீரியஸா மெண்டல் அப்செட் ஆகிட்டான். அதில் ரேங்க் குறைஞ்சு போய்... என் கூட சி.ஏ. பண்ண வேண்டிய பையன் சார். இப்ப ஏதோ ஒரு கால் சென்டர்க்கு வேலைகுப் போய்ட்டு இருக்கான் டாக்டர். நீங்க தான் அவனை எப்படியாவது சரி பண்ணனும். ப்ளீஸ்...!"

"ஓ.கே. மிஸ்டர் வெங்கட் ராகவன் உங்க கிட்ட ஒரு கேள்வி. மிஸ்டர் சந்த்ருவுக்கு சின்ன வயசில அவர் மனசில ஏதாவது பாதிப்பு ஏற்படற மாதிரி நிகழ்ச்சிகள் ஏதாவது நடந்ததுண்டா? அதை நினைச்சு அவர் பயந்திருக்காரா?"

அந்த மிஸ்டர் வெ.ரா. யோசித்துக் கொண்டிருக்க, மிஸஸ் வெ.ரா. குறுக்கிட்டார்.

"டாக்டர்! நான் சொல்றேன். ஒரு தடவ சின்ன வயசில கிராமத்துக்கு ஆனுவல் லீவ் போயிருந்தப்ப, ஒரு குடும்பமே தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. அவன் போயிருந்தது பாட்டி விட்டுக்கு. இவர் அம்மா வீடு. அந்தக் குடும்பம் இவங்க வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்திருக்கு. ரெண்டு பெரியவங்க, ரெண்டு சின்னப் பசங்க, ஒரு குட்டிப் பொண்ணு... எல்லோரும் இறந்திருந்தாங்க. கடன் தொல்லை. ஒரே ஒரு பாட்டி மட்டும் உயிரோட இருந்திருக்காங்க. அவங்க ஒவ்வொரு பிணமா கட்டிப் புரண்டு அழறது இவன் மனசில அப்பப்டியே பதிஞ்சிருக்கணும். ஏன்னா, அப்புறம் அவன் லீவு முடிஞ்சு வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமும் அப்பப்போ தூக்கத்தில் இருந்து திடீர் திடீர்னு முழிச்சுக்குவான். நடுங்கும் உடம்பு. அது மறையவே ரெண்டு வருஷம் ஆச்சு. அது ஒண்ணு தான் எனக்குத் தெரிஞ்சு மன அளவில பாதிப்பு அவனுக்கு.." கண்களில் துளிர்த்த உப்பு நீரைத் துடைத்தபடியே அவர் பேசினார்.

டாக்டர் தீவிரமாக யோசித்தார். அறையின் மெல்லிய கடிகாரம் முட்களைத் தள்ளிக் கொண்டிருந்தது.

டாக்டர் பேச ஆரம்பித்தார்.

"ராக்கேஷ்! உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். A Beautiful Mindனு ஒரு படம் வந்திச்சு. 2001ல. Schizophreniaனு ஒரு Psychiatric Disease . அதாவது அவங்க, அவங்களே க்ரியேட் பண்ணிக்கிட்ட ஒரு உலகத்தில் வாழ்வாங்க. அதில அவங்களே கேரக்டர் ஃபார்ம் பண்ணிக்குவாங்க. அந்த கேரெக்டர் என்ன செய்யும், என்ன செய்யணும் எல்லாம் இவங்க தான் முடிவு பண்ணுவாங்க.

அது போல் ஒரு நோய்.. நோய்னு சொல்லலாமானு தெரியல. அது தான் இப்ப சந்த்ருவுக்கு வந்திருக்கு.

ஏன் சந்த்ருவுக்கு மட்டும் வரணும்? குட் கொஷன். எல்லோரையும் போல் வாழாத அப்நார்மல் லைஃப். நைட் லைஃப். அதில் அவர் பேர் வேற. வேற விதமான கல்ச்சர் உள்ள மக்களோட பேச வேண்டி இரூகு. அந்த நைட்ஸ் மட்டும் அவர் வேற ஒரு ஆளா மாற வேண்டி இருக்கு. வேற ஒரு பேரோட், வேற ஒரு கல்ச்சர்ல பேசிக்கிட்டு, சுற்றி இருக்கிற உலகத்தோட சம்பந்தமே இல்லாம எங்கயோ இருக்கற வேற ஒரு மக்கள்கூட... சுற்றி இருக்கிற உலகம் தூங்கினப்புறம் இவர் விழிக்க வேண்டி இருக்கு. இவர் தூங்க போகும் போது, உலகமே - இவரைச் சுற்றின் இருக்கிற உலகமே - தன் வேலையைப் பார்த்து ஓடுது. இப்படி இவர் வேலை இவருக்கு வேற ஒரு உலகத்தைக் காட்டுது.

இவர் உடல் மட்டும் இங்க இருக்கு. மனம் ரெண்டு விதமான உலகங்களுக்கு போய்ட்டு போய்ட்டு வருது. அதுவும் தினமும். பகல்ல ஒரு உலகம். இரவில் சம்பந்தமே இல்லாத வேற ஓர் உலகம்.

அங்கயே அவருக்கு ரெண்டு விதமான கேரக்டர்ஸைக் கொடுக்குது.

கால் சென்டர்ல ஒர்க் பண்ற எல்லார்க்கும் இப்படித் தான் இருக்குமா? நாட் நெசசரி. இப்படி இரு வேறு வாழ்க்கையையும் எஞ்சாய் பண்ணி வாழ்றவங்களையும் எனக்குத் தெரியும்.

பட் சந்த்ரு கொஞ்சம் வேற மாதிரி. இவருக்கு ஒரு டீப் லவ் இருந்திருக்கு. அது உடைஞ்சிருக்கு. இவரையும் உடைச்சிருக்கு. அதில சிதறிப் போனவர் இன்னும் சரியா ஒட்டல. அந்த லவ் டீப்ப அவருக்கு இருந்திருக்கு. அதை விட அந்த லவ் இப்ப இல்லைங்கற உண்மை அவர் மனசில, அடியாழத்தில் ஒரு நெருப்பா புகைஞ்சிட்டே இருந்திருக்கு.

லெட் இட் பி.

தென் அனதர் இம்ப்பார்ட்டண்ட் திங். சின்ன வயசில கிராமத்தில் பார்த்த மரணங்கள். அந்தப் பதிவுகள் துடைக்கவே முடியாதபடி இவர் சப் கான்ஷியஸ் மைண்ட்ல இருந்திருக்கணும்.

மாறுபட்ட வாழ்க்கை முறைகள், நைட் லைஃப், உடைஞ்ச காதல், கேக்க ஆள் இல்லாத தனிமை, அடியாழத்தில் இருந்து கிளம்பி வந்த மரணங்கள்.... எல்லாம் சேர்ந்து இவரை ஒரு கொலாப்ஸ்ட் ஸ்டேட்ல கொண்டு போயிருக்கு. ஒரே அழுத்தம். அந்த மெண்டல் ப்ரஷர்ல இருந்து தப்பிக்கறதுக்கு இவர் தேர்ந்தெடுத்த வழி அந்த அழுத்தங்கள் கேட்கிற காட்சிகளை மனதிற்கு கொடுத்து அதை நம்ப வைக்கிறது. இந்த மெதட்ல மனம் நம்பிடுச்சுனா, அந்த அழுத்தங்கள் அப்புறம் இருக்காதுனு நம்பி இருக்கார்.

அப்ப வெளி வந்த ஒரு கேரக்டர் தான் அழகர்சாமி.

அந்த கேரக்டர் யாரும் இல்ல. மரணம் அடைஞ்ச ஒரு பையனை இவர் உருவாக்கறார். இவர் கிராமத்து மனிதர்கள், அங்கிருந்து வெளியே வர்ற ஸ்டூடண்ட் எப்படி இருப்பான் அப்படின்னு இவர் படிச்சதை வெச்சு ஒரு பிம்பம் வெச்சிருக்கார். அதில் இந்த அழகிரிசாமியை மோல்ட் பண்றார்.

கிராமத்து பையன்கள் பண்ற மாதிரி ஒரு வாழ்க்கையை அந்த கேரக்டருக்கு கொடுக்கறார். மால்களைப் பார்த்து வியப்பது, சிட்டி பொண்ணுங்களை ஆச்சரியமாப் பாக்கறது.. இத்யாதி, இத்யாதி. இப்படி இவர் வில்லேஜ் பசங்களைப் பற்றி வெச்சிருக்கிற பிம்பம் தான் அழகர்சாமி.

நெக்ஸ்ட் அந்த கேரக்டரை இவர் போகணும்னு நெனச்ச வேலைக்கு அனுப்பறார். இவர் காதலிச்ச பொண்ணையே காதலிக்க வைக்கிறார். நல்லாக் காதலிக்கும் போது, சப் கான்ஷியஸ் மைண்ட்ல இருக்கற காதல் தோல்வி வெளிய வருது. 'அது எப்படி நான் காதலிச்சுத் தோற்று போன பொண்ணை, இவன் காதலிக்கலாம்'னு கேள்வி கேக்குது.

மனிதனோட பேஸிக் இன்ஸ்டின்க்ட் ஜெலஸி. பொறாமை ஒரு அடிப்படை குணம். அது வெளிய வந்தப்புறம், இவரே அந்தக் காதலை முடிச்சு வைக்கிறார். அதுக்கு இவர் யூஸ் பண்ணின டெக்னிக் இவர் காதல் தோல்வி அடைந்த விதம். அதே டயலாக்ஸ். மனசிலிருந்து வெளியே எடுத்து இவர் யூஸ் பண்ணி இருக்கார்.

அழகர்சாமியோட காதலை முடிச்சு வைக்க இவர் போட்ட திட்டம் தான், அப்படி ஒரு பொண்ணே இல்லைனு அழகர்சாமி காரெக்டரை நம்ப வெக்கிற சிட்சுவேஷன்ஸ்.

அப்படியே அவனைக் கொலையும் பண்ணி அவன் காரெக்டரை சாகடிச்சிடறார்.

காதல் தோல்வில அழகர்சாமி சூசைட் பண்ணிக்கிற மாதிரி, இவர் அந்த கேரக்டரை முடிச்சு வெச்சிட்டார்.

எப்படி ஓர் எழுத்தாளர் ஒரு கேரக்டரை கதைக்கு உள்ள கொண்டு வந்து, அதை அவர் ஏற்படுத்தற சிச்சுவேஷன்ஸ்ல நடமாட விட்டு, அதை செயல்பட வைக்கிறாரோ.. அதே போல் சந்த்ரூவும் அழகர்சாமினு ஒரு கேரக்டரை உருவாக்கி அதை செயல்பட வெச்சு, கடைசியில் அது இவர் காதலுக்கு போட்டின்னு வந்ததுக்கு அப்புறம், இவரே அந்த கேரக்டரை முடிச்சு வைக்கிறார்.

விஷுவல் ஹாலுஷினேஷன் படி சந்த்ரு உருவாக்கின அழகர்சாமி கேரக்டருக்கு , விசுவல் ஹாலுஷினேஷன் படி காதலி இல்லைனு செயல்படுத்தினார்னா, மனம் என்ற ஒன்றைப் பற்றி என்ன சொல்றது சொல்லுங்க?

வாட் டு சே ஃபர்தர்? மனித மனம் என்பது இன்னும் புரிபடாத ஒரு மாயக் கரும் குகை. அதில் நாம் போக வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ இருக்கு.

அவராகவே ரெண்டு கேரக்டரா இருந்து, ஒரு கேரக்டரை முடிச்சு பட் இன்னும் அந்த கேரக்டரை விட்டு வெளியே வராம இருக்கார். வி ஹேவ் டு ட்ரீட் ஹிம் இன் தட் வே.

திஸ் கேஸ் இஸ் சம் ஹவ் ரிடிகுலஸ்.

தட்ஸ் ஆல்..."

(முற்றும்.)

No comments: