Thursday, April 24, 2008

இரட்டைக் கிளவி..!



'லகல கலகல ரெட்டைக்கிளவி
தகதக தகதக ரெட்டைக்கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ!

பிரித்து வைத்தல் நியாயமில்லை
பிரித்துப் பார்த்தால் பொருளுமில்லை
ரெண்டல்லோ ரெண்டும் ஒன்றல்லோ!'

மாடர்ன் மங்கையாக ஓர் ஐஸும், தாவணி போட்ட தீபாவளியாக மற்றோர் ஐஸும் கலந்து கட்டி ஆட, எஸ்.வி.சேகர் கோக்கில் விஸ்கி கலந்து கொடுத்து இரண்டு ப்ரசாந்த்களையும் மயக்க, அவை இல்லாமலேயே நாம் கிறங்கிப் பார்க்க இரகுமானின் இசையில், வெங்கியின் கிராபிக்ஸ் காட்சிகளில் எலும்புக்கூடு பரத வணக்கம் சொல்லி எட்டு வைத்துப் போகும் 'கண்ணோடு காண்பதெல்லாம்' பாட்டில் தான் இரட்டைக் கிளவி தெளிவாகப் புரிந்தது.

ஒரே வார்த்தை இரண்டு முறை வரும். சேர்ந்து படிக்கும் போது அர்த்தம் இருகும். பிரித்து வைத்தால் ஒரு பொருளும் கொடுக்காது. அதுவே இரட்டைக் கிளவி என்று அறிகிறோம்.

அடுக்குத் தொடர் என்று ஒன்றும் இருக்கின்றது. 'அவள் அந்த டைட்டான டீஷர்ட்டில் மப்பும் மந்தாரமுமாக, கொப்பும் குலையுமாக நின்றாள்.' என்று படித்தால் புரிந்து கொள்கிறோம். மப்புக்கும், மந்தாரத்திற்கும், கொப்புக்கும், குலைக்கும் தனித்தனியே அர்த்தங்கள் இருக்கும் போது அவை சேர்ந்து வருகையில் வேறோர் அர்த்தம் தருகின்றன அல்லவா?

'ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி கலகல என வீதியிலே'

என்ற பழைய பாடலிலும் சரோஜா தேவி (இந்த ச.தேவி. நடிகைங்க..!) பாடிச் செல்வார். அதிலும் இரட்டைக் கிளவி வருகின்றது.

'காத்து சும்மா சிலுசிலுனு வீசுது.'

'க்ளைமேட் குளுகுளுனு இருக்கில்ல?'

'எங்கப்பா படிபடினு உயிர் எடுக்கிறார்.' - இது இரட்டைக் கிளவியா? அடுகுத் தொடர் என்று நினைக்கிறேன்.

'மரத்துல சும்மா விறுவிறுனு ஏறிட்டான்.'

'சதுப்பு நிலம் சொதசொத என்று இருக்கும்.'

வற்றை விட அட்டகாசமா இரட்டைக் கிளவி நாம அடிக்கடி கேட்ட ,கேட்கிற பாடல்ல வருதுங்க. அதே தாங்க.. கந்தர் சஷ்டி கவசம் தான்.

பாடல் நடுவில,

ரகன பவச ர ர ர ர ர ர ர
ரிகன பவச ரி ரி ரி ரி ரி ரி ரி

னும்,

செக கன செக கன செக கன செகன
மொக மொக மொக மொக மொக மொக மொகன
நக நக நக நக நக நக நகென
டிகு குன டிகு டிகு டிகு குன டிகுன

ர ர ர ர ர ர ர ர ர ர ர ர ர ர ர
ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி
டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு
டகு டகு டிகு டிகு டங்கு டிங்குகு

னும் கேட்டிருக்கோம். இதுக்கெல்லாம் ஆழ்ந்த அர்த்தங்கள் கண்டிப்பாக இருக்கும். இல்லாம சும்மா இந்த மாதிரி எழுதி இருக்க மாட்டார், தேவராய சுவாமிகள். ஆனால் முதலில் பார்க்கும் போது இதெல்லாம் இரட்டைக் கிளவி மட்டும் இல்லை, அதையும் தாண்டி எக்கச்சக்க கிளவிகள் போல தெரிகின்றது அல்லவா?


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஆனா...

டண்டணக்கா ஏ டணக்குணக்கா
ஏ டண்டணக்கா ணக்கா ணக்கா ணக்கா ணக்கா ணக்கா ணக்கா...

இது மட்டும் எந்த கேட்டகிரில வரும் என்று தெரிய மாட்டேன் என்கிறது.

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

2 comments:

சென்ஷி said...

:))

நல்லாருக்குது.. வாழ்த்துக்கள்

இரா. வசந்த குமார். said...

அன்பு சென்ஷி... மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும்!