ரெண்டுன்னு சொன்னா என்ன எல்லாம் ஞாபகத்துக்கு வருது?
* ஒளவையார். 'இன்பம் - துன்பம், இரவு - பகல், ஆண் - பெண், சிவம் - சக்தி! இப்படி எல்லாமே ரெண்டு ரெண்டா தான் இருக்கு. அதனால முருகா ரொம்ப காண்டு ஆகாம, மறுபடியும் பேமிலி கூட போய் சேர்ந்துக்கோ..'
* மேடி நடிச்ச படம்.
* ரெண்டு வரியில உலகப் பொது மறை கொடுத்த வள்ளுவர் தாத்தா.
* 'நான் நம்பர் 2 தான்'...!
'இப்ப ஒரு குழந்தைகிட்ட ஒரு மிட்டாய் வேணுமா, ரெண்டு மிட்டாய் வேணுமானு கேட்டா, அந்த குழந்தை என்ன சொல்லும்?'
'ரெண்டு மிட்டாய்னு தான் சொல்லும்'
'ஒரு கொரங்குகிட்ட ஒரு வாழப்பழம் வேணுமா, ரெண்டு வாழப்பழம் வேணுமானு கேட்டா அந்த குரங்கு என்ன கேட்கும்?'
'ரெண்டு வாழப்பழம் தான் கேட்கும்'
'இப்ப உங்ககிட்ட ஒரு ரூபா வேணுமா, ரெண்டு ரூபா வேணுமானு கேட்டா நீங்க என்ன சொல்லுவீங்க?'
'ரெண்டு ரூபானு தான் கேட்பேன்'
'அப்ப ஒண்ணு பெருசா, ரெண்டு பெருசா..?'
'ரெண்டு தான் பெருசு'
'அப்ப நான் தான் பெருசு...!'
'அப்படிப் போட்டுத் தாக்கு!!!!'
* 'இந்தாங்கண்ணே!
'என்ன இது?'
'பழம்'
'நான் உங்கிட்ட எத்தன வாங்கிட்டு வர சொன்னேன்'
'ரெண்டு'
'ஒண்ணு இருக்கு. இன்னொண்ணு எங்க?'
'இன்னொண்ணு தாங்க இது!'
'டேய்...! நான் உங்கிட்ட என்ன சொன்னேன்?'
'பழம் வாங்கிட்டு வரச் சொன்னீங்க!'
'எவ்வளவு குடுத்தேன்?'
'ஒர்ரூபா!'
'ஒர்ரூபாய்க்கு எத்தன பழம்?'
'ரெண்டு பழம்!'
'ஒண்ணு இந்தா இருக்கு!இன்னொண்ணு எங்க?'
'இன்னொண்ணு தாங்க இது..!'
* மதியம் ரெண்டு மணி என்பது கடை முடிந்து மதிய உணவிற்காக அப்பா வீட்டுக்கு வரும் நேரம்.
* டாய்லட் விஷயம்.
* நாம (அட்லீஸ்ட் நான்) எதையும் ரெண்டு ரெண்டாவே பார்த்து வெச்சிருக்கோம். ரஜினி-கமல், விஜய்-அஜீத், கவுண்டமணி- செந்தில், வடிவேல்-விவேக், லாரல்-ஹார்டி, ஜாக்கி சான் - ஜெட்லீ, அ.தி.மு.க. - தி.மு.க., எம்.ஜி.ஆர்.- சிவாஜி, ராஜேஷ் குமார் - பி.கே.பி., கல்கி - சாண்டில்யன், பிஸிக்ஸ் - கெமிஸ்ட்ரி, மேக்ஸ் - பயாலஜி, தினமலர்-தினத்தந்தி, விக்டன் - குமுதம், ஜூ.வி-ரிப்போர்ட்டர், ஹிந்து-முஸ்லீம், ராஜா-ரஹ்மான், SRK-அமீர், டெண்டுல்கர்-கங்குலி, இந்தியா-பாகிஸ்தான், எஸ்.பி.பி - மனோ, சித்ரா-ஜானகி,வ.வா.ச - ப.பா.ச. இப்படி நெறய...
* கைகேயி வாங்கிய ரெண்டு வரம்.
* 'ஒன்லி டூ மினிட்ஸ்! நூடுல்ஸ் ரெடி!'
* வெட்டு ஒண்ணு! துண்டு ரெண்டு!
கடைசியா ஒரு மொக்கை :
ரெண்டுன்னு ஒண்ணு தான் இருக்க முடியும்.
ஆனா ஒண்ணுனு ரெண்டு இருக்க முடியுமா..?
வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை
No comments:
Post a Comment