Monday, November 10, 2008

IRFCA.



'பா'வென விரிந்த இரு கரங்கள் மீண்டும் இணைந்து, ட்ராக் ஃபார்ம் ஆக, அதன் வழி சென்று, அலையிலாக் கடலில் தீர்த்தமாடி, இராமநாதர் கோயிலில், பல கிணறுகளில் இருந்து மொண்டு மொண்டு தலையில் ஊற்றி வழிபட்ட இராமேஸ்வரப் பயணம் தான் முதல் இரயில் பயணம் என்று நினைக்கிறேன். மேக மூட்டமாய் இருக்கின்றது.

தெளிவான நினைவாய் இருப்பது மதுரையில் ஏறி (பாண்டியன்...?) இரவு முழுதும் உறங்காமலே, சென்னை அடைந்து ரசகுல்ல மூன்று தடவை வாங்கி உண்ட முதல் பஃபே வட நாட்டு இரவுக் கல்யாணத்தை அட்டெண்ட் செய்த இரயில் ஞாபகம்!

மற்றும் சில மறக்க இயலாத பதிவுகளை இரயில்வே தந்துள்ளது.

+2 விடுமுறையில் சென்னை வந்து திருமயிலை வரை மட்டுமே வளர்ந்திருந்த பறக்கும் ரயிலில், 'ஹா'வென கட்டிடங்களின் மேல் மிதந்தது, கல்லூரியில் முதலாண்டு விடுப்பில் என்.சி.சி. ஆர்மி கேம்புக்காக சிங்கப்பெருமாள் கோயில் ஸ்டேஷனுக்கு கிண்டியில் இருந்து நண்பர்களோடு சென்றது, 16:30க்கு எழும்பூரில் இருந்து கிளம்பும் ராக்ஃபோர்ட்டைப் பிடிக்க முயன்று, கடைசி நேரத்தில் சேத்துப்பட்டுக்கு நான் மின்சார ரயிலில் வர, எதிரில் பூதம் போல் கடந்தது, நான்கு வருடமும் ஏற்காடு எக்ஸ்ப்ரஸே வாகனம் ஆனது, ஒரு தீபாவளிக்கு நான்கு பேர்கள் உட்கார்ந்திருந்த ஜெனரல் கம்பார்ட்மெண்ட்டின் முதல் தளக் கம்பிகளில் படிப்பின் மேல் ஆர்வம் இல்லாத +2 பையனைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டே வந்த ஸ்கூல் டீச்சர், ராமாவரத்தில் தங்கியிருந்த ஆரம்பக் கட்டங்களில் ஒரு செவ்வாய் பரபரப்பான காலையில், கிண்டி ப்ரிட்ஜைக் கடக்கும் போது, மீட்டர் கேஜ் டு ப்ராட் கேஜுக்கு மாறிக் கொண்டிருந்த நேரமாதலால், கூட்டம் அப்பிய பீச் ட்ரெயினில் இருந்து பறந்து விழுந்து, நூறு அடிகள் புரண்டு எழுந்த கல்லூரி மாணவனின் முகம், டாய்லெட்டின் கீழே அதி வேகத்தில் விரையும் தண்டவாளங்கள், முட்டி போட்டு நகரும் காலின் கீழே துணியால் கூட்டி விட்டு, கை நீட்டி இரக்கும் சிறுவர்கள், சென்னைக்கும் பெங்களூருக்கும் பந்தாடப்பட்ட போது பார்த்த பெயர் மாற்றங்கள், குளிர் மாற்றங்கள், சேலம் வழி செல்லும் இரவுப் போதில் பனி பொங்கும் கவிதைகள், பகல் நேரச் சுட்டெரிக்கும் கம்பிகள், மணலோடும் பாலாற்றுப் படுகை, மெஜஸ்டிக் ஜங்ஷனில் 'லா' பேசிய டை இளைஞன் மேல் உடைத்த மரக் கட்டையோடு பாய்ந்த சிறுவனின் முகத்தில் தெரிந்த போலீஸுக்கு கைமாற்றிய இருபது ரூபாயின் தைரியம், திருமுல்லைவாயிலில் இருப்பதாகச் சொன்ன ஒரு ஆர்ட்டிஸ்டின் அறிமுகம், சென்னையில் இருந்து ஊருக்கு வருகையில், ஓரிடத்தில் இரண்டு மணிநேரம் நின்று விட, காத்திருந்து, பின் பொறுமை இழந்து இறங்கி இடம் கேட்டு நொந்த நேரம் (பள்ளிபாளையம், ஈரோட்டில் இருந்து வெறும் 2 கி.மீ.), அரக்கோணத்தில் இங்க்லீஷ் டி.வி.டி. விற்கும் கிராமத்துப் பெண், சப்போட்டா விற்கும் கிழவிகள், பொட்டு, ஊசி, காலண்டர், டார்ச் விற்கும் மின்சார ரயில் விற்பனையாளர், வெளி உலகிற்கே சம்பந்தமே காண விரும்பாத ரேபான் கண்கள், ஐ-பாட் காதுகள், ரீபோக் கால்கள், தி ஆல்கெமிஸ்ட் படிப்பு பையன், ஓரிடத்தின் காற்றை வேறிடத்தில் கக்கும் காற்றுத் தலையணைகள்...!

இரயில் பயணங்கள் எப்போதும் அலாதியானவை.

குஷ்வந்த் சிங்கின் 'Train to Pakistan'. கல்கியின் அலை ஓசை. பஷீர் வாழ்நாளின் பாதிப் பயணங்கள் இரயிலின் வழி! தி.ஜ.வின் ஒரு சிறுகதை.

ஓடு இரயில் என்பது நகரும் ஒரு சமூகம். ஒரு நழுவல்.

அமெரிக்காவின் இந்திய இரயில்வே விசிறிகள் சங்கத்தின் (Indain Railways Fan Club of America) தளத்தை இன்று பார்த்தேன். தேச இரயில்வேயில் தங்கள் அனுபவங்களைச் சொல்லி இருக்கிறார்கள்.

காணுங்களேன் :: IRFCA

***

Henry Beam Piper எழுதிய Operation R.S.V.P என்ற குட்டிச் சிறுகதையைப் படித்தேன். அதன் முதல் ஒரு பகுதி கீழே ::

Vladmir N. Dzhoubinsky, Foreign Minister, Union of East European Soviet Republics, to Wu Fung Tung,
Foreign Minister, United Peoples' Republics of East Asia:
15 Jan. 1984

Honored Sir:

Pursuant to our well known policy of exchanging military and scientific information with the Government, of friendly Powers, my Government takes great pleasure in announcing the completely successful final tests of our new nuclear-rocket guided missile Marxist Victory. The test launching was made from a position south of
Lake Balkash; the target was located in the East Siberian Sea.

In order to assist you in appreciating the range of the new guided missile Marxist Victory, let me point out that the distance from launching-site to target is somewhat over 50 percent greater than the distance from launching-site to your capital, Nanking.

My Government is still hopeful that your Government will revise its present intransigeant position on the Khakum River dispute.

I have the honor, etc., etc., etc.,

V. N. Dzhoubinsky.

இதன் தொடர்ச்சியை இங்கே சென்று டவுன்லோட் செய்து படித்துக் கொள்க!

ப்போதோ எழுதிய ஒரு கு.க!

எதிர் பாராமல்
உன்னை
எதிரே
பார்க்கையில்
என்ன பேசுவது
என்பதை
இந்த மனதிற்கு
யார்
கற்றுக் கொடுப்பது?

8 comments:

முரளிகண்ணன் said...

கவிதை நச்

இரா. வசந்த குமார். said...

அன்பு முரளிகண்ணன்...

மிக்க நன்றிகள் தங்களது "நச்" கமெண்ட்டிற்கு!

thamizhparavai said...

//இரயில் பயணங்கள் எப்போதும் அலாதியானவை.//
அதை எழுத்தில் படிப்பதும் இன்னும் அலாதியானது. வார்த்தைகளின் இடைவெளிகளில் எனது ரயில் பயணங்களும் கண்முன் ஆடிவிட்டுச் சென்றது.
நன்றி வசந்த்...
கவிதை நல்ல அனுபவம் அனைவருக்கும்...

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

எல்லோர்க்கும் அனுபவமானவையானாலும் மறக்க முடியாது...இரயில் பயணமும், எதிர் பாராமல் பார்த்து வயிற்றுக்குள் அட்ரீனலின் கத்தி செருகும் பெண்களும்!

thamizhparavai said...

//எதிர் பாராமல் பார்த்து வயிற்றுக்குள் அட்ரீனலின் கத்தி செருகும் பெண்களும்! //
'நச்'

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

இதில் நிறைய அனுபவம் இருக்கின்றது!!!

thamizhparavai said...

அவர்கல் கத்தியைப் பார்வையால் சொருகும்போதே, அவளுடன் வருபவன் அதில் ஆசிட்டையும் ஊற்றிவிட்டுப் போய் விடுவான்...
எனக்கு இதில் அனுபவம் நிறைய....

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

Cooooooooolllllllllllllllllll...!!!!!!!!!!!!