Wednesday, April 23, 2008

இது நாடகம்?

ழக்குரைஞர் அலுவலகம்.

வக்கீல் இருக்காரா?
இருக்கேன், யாரு?
நான் முனியன்.
என்ன விஷயம்?
கேஸ் போடணும்.
என்ன கேஸ்?
டைவர்ஸ் கேஸ்!
யார் மேல?
என்னாங்க கேள்வி?
பொண்டாட்டி மேலயா?
ஆமாங்க சார்.
என்ன காரணம்?
ஒத்து வரலைங்க.
அதான் ஏன்?
காசு வேணுங்கறா!
எதுக்கு காசாம்?
குடும்பம் நடத்தவாம்.
சம்பாதிச்சுக் குடு!
என்னது சம்பாதிக்கறதா?
வேற எப்படி?
திருட்டு, கொள்ளை.
எல்லாம் தப்பு.
வெட்டிப் பேச்சு.
வேற என்ன?
டைவர்ஸ் தான்.
பொண்டாட்டி எங்க?
எதுக்கு அவ?
கொஞ்சம் பேசணும்.
வர மாட்டா.
எங்க இருக்கா?
வீட்டுக்குப் போய்ட்டா.
யார் வீட்டுக்கு?
அவ அம்மா!
அடிச்சியா நீ?
லேசாத் தொட்டேன்!
அது பிரச்னை!
பொண்டாட்டியைத் தொடறதா?
நீ தொடல!
சரி, அடிச்சேன்!
அப்ளை பண்ணிடறேன்!
எதுக்கு அப்ளை?
டைவர்ஸ் வாங்கய்யா!
சீக்கிரம் பண்ணுங்க!

ஃபேமிலி கோர்ட்.

மை லார்ட்!
வக்கீல் சார்!
இரு, சொல்றேன்!
இங்க வாங்க!
என்ன சொல்லு?
ஹியரிங் நிறுத்துங்க!
என்ன சொல்ற?
வாபஸ் வாங்கறேன்.
எதை கேஸையா?
ஆமா உடனே!
ஏன் திடீர்னு?
சேர்ந்து வாழணும்னு!
ஆசை வந்திடுச்சா?
ரொம்ப ஆசை!
காரணம் தெரிஞ்சுக்கலாமா?
பணம் கெடச்சிருக்கு!
யாருக்கு, உனக்கா?
இல்லை அவளுக்கு!
எவ்வளவு பணம்?
ரெண்டு லட்சம்!
எப்படி அவ்வளவு?
லாட்டரி மூலமா!
இங்க Banned.
அங்க இல்லை.
எங்க வாங்கினா?
அம்மா ஊருல.
எந்த ஊரு?
கோட்டயம், கேரளா!
அதிர்ஷ்டம் தான்!
ரெண்டு பேர்க்கும்!
உனக்கும், எனக்கும்!
ஆசை தான்.
வேற யாருக்கு?
எனக்கும் அவளுக்கும்!
கேஸை வாபஸ்...
அப்பவே சொல்லிட்டேன்!
என்னோட ஃபீஸ்?
ரெண்டு நூறு!
அவ்வளவு தானா?
அதுவே அதிகம்!
ஏன் குறைச்சல்?
பேசினது குறைச்சல்!
எவ்வளவு பேசினேன்?
மை லார்டு!
சரி தான்..!

****

இது நாடகம்?
யார் சொல்றது?
நீ மட்டும்!
நாடகம் இல்லையா?
உதை வாங்குவ!
வேற என்ன?
உரையாடல்னு சொல்லலாம்!
அப்படியே சொல்லிக்கோங்க..!
உனக்குப் பரவால்லயா?
ஓகே தான்!
எதுக்கு எழுதின?
ஒரு ஸ்பெஷலா!
என்ன அப்படி?
ரெண்டே பேர்!
முனியனும், வக்கீலும்!
ரெண்டே சிச்சுவேஷன்!
ஆபீஸும், கோர்ட்டும்!
டயலாக் எப்படி?
என்ன எப்படி?
ரெண்டே வார்த்தை!
எதுக்கு இப்படி?
வ.வா.ச. ரெண்டுக்காக!
*&%$# க1^#!@(}!
என்ன அர்த்தம்..!
சொல்ல முடியாது...!


வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

2 comments:

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

ரசிக்க வைத்த பதிவு! படித்து முடிக்கும் வரை ஒரு புன்னகையை முகத்தில் இருத்தி வைத்தது!

இரா. வசந்த குமார். said...

அன்பு வந்தியத்தேவன்... மிக்க நன்றி....!