
இப்பதிவில் மகாத்மா காந்தி பற்றி 'தேசத் துரோகி' என்று கூறியுள்ளார்கள்.
http://seithivimarshanam.blogspot.com/2008/01/blog-post_31.html
எப்போது இங்கு தேசம் என்று ஒன்று இருந்தது? எல்லோரும் குட்டி குட்டியாய் சமஸ்தானங்களை வைத்துக் கொண்டு ராஜாங்கம் பண்ணிக் கொண்டிருந்தவர்கள் தானே? ஒரு நாடாக என்று இருந்து வந்தது? ஆன்மீகமும், இந்து மதமும் மட்டுமே இமயம் முதல் இலங்கை வரை இணைத்து வைத்திருந்ததே ஒழிய, அரசாங்கமாக எக்காலத்தில் அத்தனை நாடுகளும் ஒன்றாய் இருந்தன?
குப்தர் காலத்திலும், மெளரியர் காலத்திலும், இராஜேந்திரன் காலத்திலும், மொகலாயர் காலத்திலும் பெரும்பாலான 'பகுதி'களை மட்டுமே பிடிக்க முடிந்தது. என்று ஒரே நாடு என்ற எண்ணம் வந்தது?
பிரிட்டிஷார் வந்து அத்தனையும் ஒன்றாக ஆட்சி செய்யத் தொடங்கிய பின் தானே ஒரே குறிக்கோளோடு எதிர்க்கத் தொடங்கிய பின் தானே இறுதியில் ஒரே தேசம் என்ற எண்ணத்தில் ஒரு நாடாக மாறின சமஸ்தானங்கள்?
இல்லாவிடில் நீங்கள் இன்று பெங்களூர் சென்று வேலை பார்க்க முடியுமா, பாஸ்போர்ட் இல்ல்லாமல்? வேறு மாநிலங்களுக்கு சென்று வர முடியுமா, இலகுவாக? ஐரோப்பா போல் குட்டி குட்டி நாடுகளாக உடைந்திருந்தால் என்னவாய் இருக்கும்? மீண்டும் போர். ஒருவனை ஒருவன் அடித்துக் கொண்டு, பழைய சரித்திரம் திரும்பும்.
அப்படியொரு தேசம் என்ற எண்ணத்தைக் கொண்டு வந்தவர்களில் முதன்மையானவரான மகாத்மா காந்தியை 'தேசத் துரோகி' என்ற பட்டத்தில் கொண்டு வருவது சரியல்ல. வேண்டுமானால் அவர் இந்து மதத்திற்கு ஆதரவானவர் என்று கூறி விட்டுப் போங்கள்.
ஒருவர் இருக்கையில் இல்லாத ஒன்றுக்கு அவர் துரோகம் செய்தவர் என்பது நகைப்புக்குரியது.
பில் கேட்ஸ், மைக்ரோசாப்டை உருவாக்கி லினக்ஸுக்கு துரோகம் செய்து விட்டார் என்பது போல் இருக்கிறது, நீங்கள் காந்தியை 'தேசத்' துரோகி என்பது..!
7 comments:
நீங்கள் கூறியது சரியே .அதுவும் பில்கேட்ஸ் example excellent.
அருமை அனானி... மிக்க நன்றி தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்...! மீண்டும் மீண்டும் வருக...!
this is nothing pa...recently "Selfish Mother Teresa" nu oru article padichen...inaiyathil...
mm...pessimists edhai venumnaalum mosamaa pesuvaanga...:)
அன்பு மல்லிகை...
/*
this is nothing pa...recently "Selfish Mother Teresa" nu oru article padichen...inaiyathil...
mm...pessimists edhai venumnaalum mosamaa pesuvaanga...:)
*/
அடப் பாவிங்களா... இப்படியுமா இருக்காய்ங்க...
//இல்லாவிடில் நீங்கள் இன்று பெங்களூர் சென்று வேலை பார்க்க முடியுமா, பாஸ்போர்ட் இல்ல்லாமல்? வேறு மாநிலங்களுக்கு சென்று வர முடியுமா, இலகுவாக? ஐரோப்பா போல் குட்டி குட்டி நாடுகளாக உடைந்திருந்தால் என்னவாய் இருக்கும்? மீண்டும் போர். ஒருவனை ஒருவன் அடித்துக் கொண்டு, பழைய சரித்திரம் திரும்பும்.//
வசந்த், சென்சன் விசா என்று ஒன்று இருக்கிறது. அதை எடுத்தால் 16 ஐரோப்பிய நாடுகளுக்கு விசா இன்றி எப்போது வேண்டுமானால் சென்று வர இயலும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் குடிமக்களாக உள்ளோருக்கு அந்நாடுகளுக்குள் வேலை பார்ப்பது இலகு, முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. சில கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இன்னும் முன்னேறவில்லை. ஆனால், நாடு பிடிப்பது போன்ற போர்க் கொடுமைகள் இல்லை.
:) தாங்கள் எழுதியிருப்பதிலிருந்து ஒரு விஷயம் புரிகிறது. தாங்கள் ஒரு அரைவேக்காடு. முதலில் நிறைய படியுங்கள் பின் எழுத முற்படவும். தமிழகம் ஒரு வாய் தண்ணீருக்கு எவ்வளவு கஷ்டப்படுகிறது என்பது மலையாளத்தில் மினரல் வாட்டர் குடிக்கும் உங்களுக்கு எங்கே தெரிய போகிறது.தேச ஒற்றுமை என்னும் கோவணம் கிழிந்து தொங்குகிறது. உங்கள் தாய் அல்லது தந்தை கர்நாடக வன்முறையில் இறந்திருந்தால், உங்கள் கட்டுரையின் சாராம்சம் மாறியிருக்கும்.
அன்பு பொழிலினி...
தங்கள் வருகைக்கும், வரிகளுக்கும் மிக்க நன்றிகள்.
நான் ஓர் அரைவேக்காடு என்று கண்டறிந்ததற்கு மிக்க நன்றி. என்னை நான் இன்னும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தங்கள் அக்கறையை 'முதலில் படி. பின் எழுது' என்ற வரிகளில் காண்கிறேன். அதற்கும் ஒரு நன்றி.
ஏதோ பிறந்ததில் இருந்தே நான் மலையள மினரல் வாட்டர் குடித்து வளர்ந்தவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் போல் இருக்கின்றது. தமிழகத்தில், 25 ஆண்டு காலம் கழித்த பின்பே இப்போது மலை நாட்டில் உள்ளேன். கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தில் பஞ்சமே வந்ததே இல்லை ,தண்ணீர் தண்ணீராகப் பாய்ந்தது என்று நீங்கள் கூறுவீராயின், ஒப்புக் கொள்கிறேன், நான் மலையாள மினரல் வாட்டர் குடிக்கிறேன் என்று!
மேற்காணும் எனது பதிவில் நான் எந்த வகையில் 'தேச ஒற்றுமை' இல்லை என்பதைப் பற்றியோ, 'தேச ஒற்றுமை' உண்டு என்பதைப் பற்றியோ பேசுகிறேன் என்று தெரியவில்லை.
காந்தியை 'தேசத் துரோகி' என்று ஏன் கூறுகிறீர்கள், அவர் இருக்கும் போது 'தேசம்' என்ற ஓர் அமைப்பே இல்லையே, அவர் தானே 'ஒரே தேசம்' என்ற கருத்தைக் கொண்டு வந்தவர்களில் ஒருவர் என்று கூறியுள்ளேன்.
தனி மனித உணர்வைத் தூண்டி விட்டு தாங்கள் அதில் குளிர் காயலாம் என்று நினைப்பின் அதற்குத் தகுந்த தளம் இதுவல்ல என்றும், அதற்குத் தக்க ஆள் நான் அல்ல என்பதும் கூறிக் கொள்கிறேன்.
தமிழகத்தில் இருக்கும் தண்ணீர்ப் பிரச்னையைப் பற்றி நான் எழுதியுள்ள ஒரு பதிவைத் தாங்கள் கண்ணுற்றதில்லை என்று நினைக்கிறேன். தயவித்து அதையும் பார்த்து, உங்களது கருத்தை உரைத்து விட்டுப் போனால், நலம்.
http://kaalapayani.blogspot.com/2008/04/blog-post_04.html
http://kaalapayani.blogspot.com/2008/04/blog-post_6601.html
மிக்க நன்றி.
Post a Comment